For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தொடங்கியது நவம்பர்..!! வாடிக்கையாளர்களே மறந்துறாதீங்க..!! மொத்தம் 14 நாட்கள் விடுமுறை..!!

07:09 AM Nov 01, 2023 IST | 1newsnationuser6
தொடங்கியது நவம்பர்     வாடிக்கையாளர்களே மறந்துறாதீங்க     மொத்தம் 14 நாட்கள் விடுமுறை
Advertisement

நவம்பர் மாதம் இன்று தொடங்கியுள்ள நிலையில், வங்கிகளுக்கு 14 நாட்கள் விடுமுறை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

Advertisement

வங்கிகளுக்கு பொதுவாக வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். வார இறுதி நாட்களுக்கான விடுமுறை நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தும். ஆனால், பண்டிகை விடுமுறைகள் மாநிலங்களுக்கு மாநிலம் மாறுபடும்.

அந்த வகையில், தற்போது நவம்பர் மாதத்திற்கான விடுமுறை பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களை சேர்த்து மொத்தமாக 14 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் மாத வங்கி விடுமுறை பட்டியல்

நவம்பர் 1 – கன்னட ராஜ்யோச்சவம், கட், கர்வா சவுத் காரணமாக பெங்களூரு, இம்பால் மற்றும் சிம்லாவில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை

நவம்பர் 5 – ஞாயிறு விடுமுறை

நவம்பர் 10 – வாங்கலா திருவிழா காரணமாக மேகாலயா வங்கிகளுக்கு விடுமுறை

நவம்பர் 11 – 2வது சனிக்கிழமை காரணமாக நாடு முழுவதும் அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை

நவம்பர் 12 – தீபாவளி பண்டிகை

நவம்பர் 13 – கோவர்தன் பூஜை, லக்ஷ்மி பூஜை, தீபாவளி பண்டிகை காரணமாக அகர்தலா, டேராடூன், கேங்டாக், இம்பால், ஜெய்ப்பூர், இம்பால் மற்றும் லக்னோவில் வங்கிகளுக்கு விடுமுறை

நவம்பர் 14 – தீபாவளி (பலி பிரதிபதா), விக்ரம் சம்வத் புத்தாண்டு, லக்ஷ்மி பூஜை காரணமாக அஹமதாபாத், பெலாபூர், பெங்களூரு, கேங்டாக், மும்பை மற்றும் நாக்பூரில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை

நவம்பர் 15 – பாய் தூஜ், சித்ரகுப்த ஜெயந்தி, லக்ஷ்மி பூஜை, நிங்கால் சக்குபா / ப்ரத்ரி துவிதியா காரணமாக கேங்டாக், இம்பால், கான்பூர், கொல்கத்தா, லக்னோ, சிம்லாவில் வங்கிகளுக்கு விடுமுறை

நவம்பர் 19 – ஞாயிறு விடுமுறை

நவம்பர் 20 – சாத் பூஜையால் பாட்னா மற்றும் ராஞ்சியில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை

நவம்பர் 23 – செங் குட் ஸ்னெம் காரணமாக மேகாலயா வங்கிகளுக்கு விடுமுறை

நவம்பர் 25 – 4வது சனிக்கிழமை காரணமாக அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை

நவம்பர் 27 – குருநானக் ஜெயந்தி, கார்த்திகை பௌர்ணமி காரணமாக அஹமதாபாத், பெங்களூரு, சென்னை, கேங்டாக், கவுஹாத்தி, ஐதராபாத், இம்பால், கொச்சி, பனாஜி, பாட்னா, திருவனந்தபுரம் மற்றும் ஷில்லாங்கில் உள்ள வங்கிகள் தவிர நாடு முழுவதும் வங்கிகளுக்கு வங்கிகளுக்கு விடுமுறை

நவம்பர் 30 – கனகதாச ஜெயந்தி காரணமாக பெங்களூரில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்

Tags :
Advertisement