Yearender | இன்றுடன் விடைபெறும் 2024.. விளையாட்டு துறையில் முக்கிய தருணங்கள் ஒரு பார்வை..!!
2024 ஆம் ஆண்டு விளையாட்டில், இதயத்தை உடைக்கும் தோல்விகள், உணர்ச்சிபூர்வமான ஓய்வுகள் மற்றும் சில சர்ச்சைக்குரிய தருணங்களைக் கண்டது. நிகழ்வுகள் நிறைந்த வருடத்தின் இறுதியை நெருங்குகையில், 2024 ஆம் ஆண்டில் விளையாட்டின் முக்கிய தருனங்களை இந்த பதிவில் பார்க்கலாம்..
கிரிக்கெட் வீரர்கள் ஒய்வு : இந்தாண்டு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்து. தென் ஆப்பிரிக்கா அணியின் நட்சத்திர வீரர் ஹென்ரிச் கிளாசன் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்தது. இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்தி மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலுமிருந்து ஓய்வை அறிவித்தது.
இந்தோனிசியாவில் 2 எஃப்.எல்.ஒ. பாண்டுங் மற்றும் எஃப்.பி.ஐ. சுபாங் அணிகளுக்கு இடையே நடந்த கால்பந்தாட்ட போட்டியில் திடிரென மின்னல் தாக்கி 35 வயதான செப்டைன் ரஹர்ஜா என்பவர் உயிரிழந்தது, ஜெர்மனி கால்பந்தாட்ட ஜாம்பவான் ஃப்ரான்ஸ் பெக்கன்பேவர் காலமானது, மன உளைச்சலால் இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் கிரஹாம் தோர்ப் தற்கொலை செய்ததாக அவரது மனைவி கூறியது,
அண்மையில் ஓய்வு பெற்ற தொழில்முறை மல்யுத்த வீரர் ரே மிஸ்டீரியோ சீனியர் உயிரிழந்தது போன்ற மரணங்கள் அந்தந்த விளையாட்டு ரசிகர்களுக்கிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. தொழில்முறை மல்யுத்த நட்சத்திர வீரர் ஜான் சீனா ஓய்வு அறிவித்தது, இந்தாண்டு இறுதியில் இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு அறிவித்தது. ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியிருக்கும்.
வினேஷ் போகத் தகுதி நீக்கம் : பா.ஜ.க. எம்.பி-யும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் அப்போதைய தலைவர் பிரிஜ் பூஷண் சிங் மீது பாலியல் புகார் கூறி அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி மல்யுத்த வீரர்கள் சாக்ஷி மாலிக், வினேஷ் போகத் பஜ்ரங் புனியா ஆகியோர் போராட்டம் நடத்தியது, 100 கிராம் எடையை காரணம் கூறி பாரிஸ் ஒலிம்பிக்கில் வினேஷ் போகத்தை தகுதி நீக்கம் செய்தது, இந்தியாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதன் பிறகு வினேஷ் போகத் தனது ஓய்வை அறிவித்தார்.
பாரிஸ் பதக்கம் : பாரிஸில் நடைபெற்ற 33-வது ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் இந்தியா சார்பில் போட்டியிட்ட வீரர்கள் 6 பதக்கங்களை வென்றிருந்தனர். இதில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் போட்டியிட்ட மனு பாக்கர் வெண்கலம் வென்று சாதனை படைத்தார். அதன் பின்பு 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு பிரிவில் சரப்ஜோத் சிங்குடன் இணைந்து மற்றொரு வெண்கல பதக்கம் வென்று சாதித்தனர். அதே நேரத்தில் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
57 கிலோ மல்யுத்தத்தில் அமன் செஹ்ராவத் போட்டியிட்டு வெண்கலம் வென்றார். 50 மீட்டர் ரைபிள் 3 பொஷிசன் சுப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்ற ஸ்வப்னில் குசலே வெண்கல பதக்கம் வென்று சாதித்தார். இது அவரின் அறிமுக ஒலிம்பிக் போட்டியாகும். அதே போல் பாரீசில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டிகளில் 7 தங்கம், 9 வெள்ளி, 13 வெண்கல பதக்கங்களுடன் இந்தியா மொத்தம் 29 பதக்கங்களை வென்றது. தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேல்(உயரம் தாண்டுதல்), பாட்மிண்டன் வீராங்கனைகள் துளசிமதி, நித்யஸ்ரீ, மனிஷா ஆகியோர் பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர்.
வரலாற்று சாதனை படைத்த இந்தியா : பாரிஸில் நடைபெற்ற 33-வது ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் இந்தியா சார்பில் போட்டியிட்ட வீரர்கள் 6 பதக்கங்களை வென்றிருந்தனர். இதில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் போட்டியிட்ட மனு பாக்கர் வெண்கலம் வென்று சாதனை படைத்தார். அதன் பின்பு 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு பிரிவில் சரப்ஜோத் சிங்குடன் இணைந்து மற்றொரு வெண்கல பதக்கம் வென்று சாதித்தனர். அதே நேரத்தில் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
இந்தாண்டு இந்தியா - தென்னாப்பிரிக்காவுக்கு இடையே கேப்டவுனில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இரு அணிகளும் சேர்த்து மொத்தம் 642 பந்துகள் மட்டுமே வீசின. 147 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகக்குறைந்த பந்தில் முடிவு கிடைத்த டெஸ்ட் போட்டி இதுவே.
நோவக் ஜோகோவிச் சாதனை : பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 33ஆவது ஒலிம்பிக் தொடர் நடைபெற்றது. இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு டென்னிஸ் போட்டியில் செர்பியா நாட்டைச் சேர்ந்த நோவக் ஜோகோவிச் ஸ்பெயின் நாட்டைச் கார்லோஸ் அல்காரஸை எதிர்கொண்டார். மிகவும் பரபரப்பாக சென்ற இந்தப் போட்டியில் 7-6(3), 7-6(2) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக தங்கப் பதக்கம் கைப்பற்றினார்.
அல்காரஸ் வெள்ளிப் பதக்கம் வென்றார். அதுமட்டுமின்றி 37 வயதான வீரராக தங்கப் பதக்கம் வென்ற வீரர் என்ற பெருமையையும் ஜோகோவிச் பெற்றுள்ளார். இதுவரையில் 24 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள ஜோகோவிச் தனது டென்னிஸ் வரலாற்றில் தற்போது ஒலிம்பிக் தங்கப்பதக்கத்தையும் சேர்த்துள்ளார். இதன் மூலமாக கோல்டன் ஸ்லாம் வென்ற 5ஆவது வீரர் என்ற சாதனையையும் இவர் படைத்துள்ளார்.
உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ் : செஸ் சாம்பியனான குகேஷின் பயணம் அசாதாரணமானது. டிசம்பர் 12ஆம் தேதி, சிங்கப்பூரில் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் தன்னுடன் கடுமையாகப் போட்டியிட்ட சீனாவின் டிங் லிரனை தோற்கடித்தார். இதன் மூலம் இளம் வயதில் சாம்பியன் பட்டம் வென்ற சாதனையைப் படைத்த குகேஷ், 1985 இல் 22 வயதில் சாம்பியன் ஆன ரஷ்ய ஜாம்பவான் கேரி காஸ்பரோவின் சாதனையைத் தகர்த்தெறிந்தார். மற்றொரு இந்திய செஸ் சாம்பியனும் தமிழகத்தைச் சேர்ந்தவருமான விஸ்வநாதன் ஆனந்துக்குப் பிறகு, இந்த மதிப்புமிக்க பட்டத்தை வென்ற இரண்டாவது இந்தியர் குகேஷ் என்பதும் குறிப்பிடத்தக்கது.
T20 உலக கோப்பை சாம்பியன் : 2024 ஆம் ஆண்டு விளையாட்டில், இதயத்தை உடைக்கும் தோல்விகள், உணர்ச்சிபூர்வமான ஓய்வுகள் மற்றும் சில சர்ச்சைக்குரிய தருணங்களைக் கண்டது. நிகழ்வுகள் நிறைந்த வருடத்தின் இறுதியை நெருங்குகையில், 2024 ஆம் ஆண்டில் விளையாட்டின் முக்கிய தருனங்களை இந்த பதிவில் பார்க்கலாம்..
Read more ; Yearender : இன்றுடன் விடைபெறும் 2024.. நாட்டை உலுக்கிய கோர சம்பவங்கள் ஒரு பார்வை..!!