இன்று முதல் 16-ம் தேதி வரை TNPSC தேர்வு நடைபெறும் என அறிவிப்பு...! 37,808 பேருக்கு அனுமதி
டிப்ளமா, ஐடிஐ கல்வித்தகுதியுடைய தொழில்நுட்ப பணியிடங்களுக்கான எழுத்து தேர்வுகள் இன்று தொடங்க உள்ளது.
மோட்டார் வாகன ஆய்வாளர் (கிரேடு-2), டிராப்ட்ஸ்மேன் (கிரேடு-2), இளநிலை வரைவு அலுவலர், இளநிலை தொழில்நுட்ப உதவியாளர், சிறப்பு மேற்பார்வையாளர், சர்வேயர், உதவி வேளாண் அலுவலர், நெசவு மேற்பார்வையாளர், ஆவின் நிர்வாகி (ஆய்வகம்), டெக்னீசியன் (பாய்லர்) உள்ளிட்ட டிப்ளமா மற்றும் ஐடிஐ கல்வித்தகுதி கொண்ட பதவிகளில் 861 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி கடந்த ஆகஸ்ட் 13-ம் தேதி வெளியிட்டது.
டிப்ளமா, ஐடிஐ கல்வித் தகுதியுடைய ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் இன்று தொடங்க உள்ளது என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. நவம்பர் 16-ம் தேதி வரை நடைபெறும். பொது அறிவு தாள் மற்றும் தமிழ்மொழி தகுதித்தாள் தேர்வுகள் ஓஎம்ஆர் ஷீட் வடிவிலான தேர்வாக இருக்கும். பாடங்களுக்கான தேர்வுகள் கணினிவழியில் நடத்தப்படும். இத்தேர்வுகளை எழுத 28,402 ஆண்கள், 9,406 பெண்கள் என மொத்தம் 37,808 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.