பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒன்றுமே இல்லை..!! செல்போனை நம்பி காதலில் ஏமாறாதீர்கள்..!! நடிகை ராதிகா அட்வைஸ்..!!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒன்றுமே இல்லை. ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டுதான் இருக்கிறார்கள் என நடிகை ராதிகா தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ, தமிழிலும் ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது தமிழில் இதன் 7-வது சீசன் நடந்து வருகிறது. 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த சீசன் 50 நாட்களைக் கடந்து பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில், பிக்பாஸ் குறித்து நடிகை ராதிகாவிடம் அவர் கலந்து கொண்ட சமீபத்திய நிகழ்வு ஒன்றில் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், “தற்போது இருக்கும் இளைஞர்கள் தங்களுடைய மொபல் போனை அடுத்து அதிக கவனம் செலுத்தும் ஒரு விஷயம் பிக்பாஸ்தான். அந்த நிகழ்ச்சியில் ஒன்றுமே இல்லை. ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டுதான் இருக்கிறார்கள். மொபலைத் தவிர்த்தாலே பாதி பிரச்சனை முடிந்து விடும். செல்போனை நம்பி காதலில் ஏமாறாதீர்கள். பெண்கள் உங்கள் உடல்நலனில் அக்கறை செலுத்துங்கள்” என தெரிவித்துள்ளார்.