நோட்!. ஐடிஆர் முதல் பான் கார்டு வரை!. இதற்கெல்லாம் இன்றே கடைசி நாள்!.
December-31: 2024ஆம் ஆண்டின் கடைசி நாளும் வந்தாச்சு. இந்த டிசம்பர் மாதத்தின் கடைசி தேதி (டிசம்பர் 31) முடிவதற்குள் அதாவது இன்றைக்குள் சில பணம் சார்ந்த பணிகளை முடிக்க வேண்டும். ஆன்லைன் பரிவர்த்தனைகள் மற்றும் பிற வங்கி தொடர்பான பணிகள் இருக்கலாம். இலவச ஆதார் அப்டேட் செய்வதற்கான சலுகையும் இந்த மாதம் முடிகிறது. டிசம்பர் 31ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டிய முக்கியமான வேலைகள் குறித்து இங்கே பார்க்கலாம்.
2023-24 நிதியாண்டிற்கான வருமான வரியை நீங்கள் இன்னும் தாக்கல் செய்யவில்லை என்றால், இந்த வேலையை விரைவில் முடிக்கவும். இதற்கான கடைசித் தேதி டிசம்பர் 31 ஆகும். இதற்குப் பிறகு நீங்கள் வரித் தாக்கல் செய்தால் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். வெளிநாட்டில் உள்ள சொத்துக்கள் அல்லது வெளிநாட்டு வருமானத்தை, வருமான வரி தாக்கல் படிவத்தில் வெளியிடத் தவறினால், கருப்பு பண தடுப்பு சட்டத்தின்கீழ் ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என வருமான வரித்துறை எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஐடிபிஐ வங்கியின் சிறப்பு FD திட்டமானது உத்சவ் நிலையான வைப்புத்தொகை ஆகும். இந்த சிறப்பு FD திட்டம் 300, 375, 444 மற்றும் 700 நாட்கள் கொண்ட FD திட்டமாகும். பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி அதிக வருமானத்துடன் கூடிய சிறப்பு FD திட்டத்தையும் கொண்டுள்ளது. இரண்டு வங்கிகளின் சிறப்பு FD திட்டத்தில் முதலீடு செய்வதற்கான கடைசி தேதி டிசம்பர் 31 ஆகும்.
01.01.2000-க்கு முன்னர் பதிவு செய்யப்பட்டுள்ள பிறப்புகளுக்கும் 01.01.2000 க்கு பிறகு 15 ஆண்டுகள் கடந்த பிறப்பு பதிவுகளுக்கும் குழந்தை பெயர் வைத்து பிறப்பு சான்று பெற 31.12.2024 வரை மட்டுமே கடைசி நாளாகும். எனவே,பெயர் சேர்க்காதவர்கள் வரும் பிறப்பு சான்று பெற 31.12.2024 வரை மட்டுமே கடைசி நாளாகும்.பிறப்பு பதிவு செய்யப்பட்டுள்ள ஊராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் நிகழ்ந்த பிறப்புக்கு சம்பந்தப்பட்ட நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் விண்ணப்பித்து பெயருடன் கூடிய பிறப்புச் சான்றிதழ் பெற்றுக் கொள்ளுங்கள். இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி குழந்தையின் பெயருடன் கூடிய பிறப்புச் சான்றிதழை பெற்றுக் குழந்தையின் எதிர்கால நல்வாழ்விற்கு பயனளிக்கும் என்று அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் வங்கிகணக்கு உள்ளிட்ட அனைத்து ஆவணங்களுடன், ஆதார் அட்டையை இணைக்க ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அதே போல, ஆதார், பான் இணைப்பு என்பது கட்டாயமாகவும் ஆக்கப்பட்டு உள்ளது. இந்த இணைப்பு நடவடிக்கைக்காக பலமுறை மத்திய அரசு கால அவகாசம் வழங்கி வந்துள்ளது. இந்நிலையில், டிசம்பர் 31-ம் தேதிக்குள் ஆதார் கார்டை, பான் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி இணைப்பை ஏற்படுத்தி கொள்ளாவிட்டால் வங்கி பரிவர்த்தனை உள்ளிட்ட சேவைகளில் பாதிப்பு ஏற்படும் என்றும் கூறி உள்ளது. பல்வேறு பகுதிகளில் தனியார் நிறுவனங்கள் பான் எண் உள்ளிட்ட விவரங்களை வைத்துக் கொண்டு, முறைகேடுகளில் ஈடுபடுவதாக எழுந்த தொடர் புகார்களையடுத்து மத்திய அரசு இதுபோன்ற நடவடிக்கை எடுத்துள்ளது.
டிசம்பர் 31ம் தேதிக்குள் அனைவரும் தங்களுடைய ரேஷன் அட்டையில் கேஒய்சி செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு டிசம்பர் 31ஆம் தேதிக்குள் கேஒய்சி செய்து கொள்ளவில்லை என்றால் ரேஷன் கார்டு ரத்தாகும் சூழல் உண்டாகலாம். எனவே பொதுமக்கள் தங்களுடைய ரேஷன் கடைக்கு நேரடியாக சென்று தங்களுடைய கேஒய்சி அப்டேட் செய்து கொள்ளலாம். ரேஷன் கடைகளில் நம்முடைய கைரேகை பதிவு செய்தாலே போதும் நம்முடைய விவரங்கள் தானாகவே அப்டேட் ஆகிவிடும்.
Readmore: உலகிலேயே தமிழ்நாட்டுப் பெண்கள்தான் அதிக தங்கம் வைத்துள்ளனர்!. உலக கோல்டு கவுன்சில் ரிப்போர்ட்!