கர்ப்பமாக இல்லை..!! ஆனால் மார்பகங்களில் இருந்து பால் வருகிறதா..? அலட்சியம் வேண்டாம்..!! உடனே மருத்துவரை பாருங்க..!!
பெண்கள் அண்மைக்காலமாக சில வித்தியாசமான பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர். அப்படியான ஆச்சரியமான விஷயம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதில் ஒரு பெண் கர்ப்பமாக இல்லாவிட்டாலும் மார்பகத்தில் பால் உற்பத்தியை எதிர்கொண்டுள்ளார். இதற்கான காரணம் என்னவென்றால், அவர் எடுத்துக் கொண்ட மருந்துகளின் பின்விளைவு தான்.
இந்த சம்பவம் பெண்களுக்கு ஹார்மோன் சமநிலையின்மை மற்றும் மனச்சோர்வு போன்ற பிரச்சனைகளை சரி செய்ய வழங்கப்படும் மருந்து. இது புரோலேக்டின் என்ற ஹார்மோனை அதிகரிக்க அல்லது கட்டுப்படுத்த பயன்படுகிறது. ஆனால், இந்த ஹார்மோனின் அளவு உடலில் அதிகரிக்கும் போது, பெண்ணின் உடலில் கர்ப்ப காலத்தில் ஏற்படும் செயல்முறைகள், கர்ப்பம் இல்லாத நேரத்தில் நடக்கும் என்று கூறப்படுகிறது.
அதன் மிகத் தெளிவான அறிகுறி மார்பகத்தில் பால் உற்பத்தியாவது. கேலக்டோரியா என்பது ஒரு பெண் கர்ப்பமாக இல்லாவிட்டாலும் பால் போன்ற திரவம் மார்பகத்தில் இருந்து வரும். இது தவிர, இந்த பிரச்சனையின் மற்ற அறிகுறிகளில் மாதவிடாய் ஒழுங்கற்ற தன்மை, தலைவலி, சோர்வு மற்றும் மங்கலான பார்வை இருக்கும் என்று கூறப்படுகிறது. ப்ரோலாக்டினை அதிகரிக்கும் மருந்துகளை பயன்படுத்துவதால் இந்த பிரச்சனை ஏற்படும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த மருந்தை அதிகமாக உட்கொள்வது அல்லது நீண்ட நாட்கள் பயன்படுத்தினால் இந்தப் பிரச்சனை ஏற்படலாம்.
மருத்துவர்கள் சொல்வது என்ன..?
எந்த மருந்தை உட்கொள்ளும் முன் மருத்துவரை அணுகுவது அவசியம். ப்ரோலாக்டின் மருந்துகளை ஒரு பெண் எடுத்துக் கொண்டால், அவரது மார்பகங்களில் இருந்து பால் வருவதையோ அல்லது வேறு ஏதேனும் அசாதாரண அறிகுறிகளையோ கண்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். நீங்கள் ஏதேனும் ஹார்மோன் மருந்துகளைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், மருத்துவரின் ஆலோசனையின்றி அதை எடுத்துக் கொள்ள வேண்டாம். உங்கள் உடல்நிலையில் ஏதேனும் அசாதாரணத்தை கண்டால், மருத்துவ உதவியை நாடுங்கள்.