பெண்களே..!! இந்த திட்டங்களில் நீங்களும் இருக்கீங்களா..? அப்படினா உங்களுக்கு ஜாக்பாட் தான்..!!
தமிழ்நாட்டில் பெண்களுக்கு, பெண் குழந்தைகளுக்கு என்று பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதில், 3 திட்டங்கள் மூலம் பெண்களுக்கு நேரடியாக பணம் வழங்கப்படுகிறது. இதன் மூலம் நேரடியாக 52,000 ரூபாய் வரை அரசு பெண்களுக்கு வழங்குகிறது. அந்த திட்டங்கள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
திட்டம் 1 : முதலமைச்சரின் பொது நிதியில் இருந்து நிதியுதவி நிவாரண பொருளாதாரத்தில் நலிவுற்ற மாணாக்கர்கள் இளநிலை மேற்கொள்ள பொறியியல் ஊக்குவிக்க பணம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி 2023-24ஆம் கல்வியாண்டில் 24 மாணாக்கர்களுக்கு நிதி உதவித் தொகையான ரூ.50,000 ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 2010-11-ஆம் கல்வியாண்டு முதல் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுகலைப் பட்டப்படிப்புப் பயிலும் அனைத்து மாணாக்கர்களுக்கும் கல்விக் கட்டணம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இது போக புதுமைப்பெண் திட்டம் போல, மாணவர்களுக்கு 1000 ரூபாய் வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
திட்டம் 2 : கடந்தாண்டு தமிழ்நாடு பட்ஜெட்டில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம்' மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் பெண்களுக்கு திருமண உதவித்தொகையும், தாலிக்கு தங்கமும் வழங்கப்பட்டு வந்தது. இத்திட்டத்தை மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம்' என்று மாற்றுவதாக முதல்வர் முக.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
திட்டம் 3 : மகளிர் உரிமை தொகை திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் விரிவாக்கத்திற்கு பின்பும் நீங்கள் அதில் தேர்வு செய்யப்படவில்லை என்றால் அதற்கு முக்கியமான சில காரணங்கள் உள்ளன. ஏற்கனவே பென்ஷன் பெறக்கூடிய பெண்கள், அரசின் வேறு நிதிகளை வங்கியில் பெற கூடிய பெண்களுக்கு பணம் வழங்கப்படவில்லை. வேறு சில ஆவணங்கள் சரியாக இல்லாத பெண்களுக்கும் பணம் வழங்கப்படவில்லை.
மாறாக ஆவணங்கள் சரியில்லாத பெண்கள், இனி திருமணம் ஆகி குடும்ப தலைவி ஆகும் பெண்கள் ரூ.1000 பெறுவதற்கு விண்ணப்பம் செய்யலாம். இப்போது செய்ய முடியாது என்றாலும் அடுத்த 4 மாதங்களுக்கு பின் திட்டத்தை விரிவாக்கம் செய்வது தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம். அப்போது விடுபட்டவர்கள் விண்ணப்பங்களை மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் மேல்முறையீடு செய்த ஒரு லட்சத்து 48 ஆயிரம் பயனாளிகளுக்கு வங்கிக் கணக்கில் ரூ.1000 வரவு வைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த திட்டம் மேலும் விரிவாக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
Read More : ”எதிர்காலத்தில் கடலில் எந்த உயிரினமுமே இருக்காது”..!! ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்..!!