இனி ”கேரளா” அல்ல..!! பெயர் மாற்றம் செய்து மீண்டும் தீர்மானம் நிறைவேற்றம்..!!
கேரளா மாநிலத்தின் பெயரை ‘கேரளம்’ என மாற்றுவதற்கான தீர்மானம் அம்மாநில சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
கடந்தாண்டு இதுதொடர்பான தீர்மானத்தை முதலமைச்சர் பினராயி விஜயன் தாக்கல் செய்து பேசினார். மலையாளத்தில் ‘கேரளம்’ என்று அழைக்கப்படும் மாநிலம், பிற மொழிகளில் கேரளாவாகவே உள்ளது. எனவே, கேரளம் என்ற பெயரையே, அனைத்து அதிகாரப்பூர்வ கோப்புகளிலும் மத்திய அரசு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தீர்மானத்தில் விஜயன், “மலையாள மொழியில் நமது மாநிலத்தின் பெயர் கேரளம். நவம்பர் 1, 1956 அன்று மொழி அடிப்படையில் மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. அந்த நாள் கேரளா உருவான நாளாகவும் அனுசரிக்கப்படுகிறது. மலையாளம் பேசும் அனைத்து சமூகத்தினருக்கும் ஒன்றுபட்ட கேரளா என்ற கோரிக்கை சுதந்திரப் போராட்ட நாட்களில் இருந்தே வலுவாக எழுப்பப்பட்டு வருகிறது. ஆனால், அரசியலமைப்புச் சட்டத்தின் முதல் அட்டவணையில் நமது மாநிலத்தின் பெயர் கேரளா என்று எழுதப்பட்டுள்ளது” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கேரளா மாநிலத்தின் பெயரை ‘கேரளம்’ என மாற்றுவதற்கான தீர்மானம் அம்மாநில சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. முன்னதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சில குறைகளை சுட்டிக் காட்டி மத்திய அரசு திருப்பி அனுப்பியது. அக்குறைகளை சரிசெய்து மீண்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
Read More : மாஸ் இயக்குனருடன் கூட்டணி வைத்த லெஜெண்ட் சரவணன்..!! எதிர்பார்ப்பை எகிறவைக்கும் அறிவிப்பு..!!