முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

”வாசனைக்கு மட்டுமல்ல”..!! தினமும் 2 போதும்..!! பிரியாணி இலையில் கொட்டிக் கிடக்கும் நன்மைகள்..!! பயன்படுத்த மறந்துறாதீங்க..!!

The aroma that comes from burning a bay leaf relaxes the nerves of the brain and relieves stress.
05:00 AM Apr 08, 2023 IST | Kokila
Advertisement

பிரியாணி இலையில் உள்ள ஆண்டி – ஆக்சிடென்டுகள் நமது உடலுக்கு ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், மன ஆரோக்கியத்தையும் கொடுக்கிறது.

Advertisement

சமையலறையில் நாம் பயன்படுத்தும் மசாலா பொருட்களில், பிரியாணி இலை ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த இலை உணவின் மணம் மற்றும் சுவையை மேம்படுத்த உதவுகிறது. இதை பார்ப்பதற்கு வெறும் இலை போல தெரிந்தாலும், இந்த இலையில் உள்ள ஆண்டி – ஆக்சிடென்டுகள் நமது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்க கூடியதாக உள்ளது. இந்த இலையை நாம் உணவிற்கு மட்டும் தான் பயன்படுத்தி இருப்போம். ஆனால், இந்த இலை நமது மனதையும், நாம் சுவாசிக்கும் காற்றையும் சுத்தமாக வைக்க உதவுகிறது. இது எவ்வாறு சாத்தியமாகும் என சிந்திக்கிறீர்களா? வாருங்கள் பார்ப்போம்.

நாம் சமையலுக்காக பயன்படுத்தும் பிரியாணி இலையை எரித்த பிறகு, அதிலிருந்து வெளிவரும் புகை நமது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. தினமும், ஒன்று அல்லது இரண்டு இலையை எரித்த பிறகு, அதிலிருந்து வெளிவரும் புகையானது நமது வீட்டை சுற்றும் காற்றை சுத்தமாக்குவதோடு, நமது மன நிலையையும் சீராக்க உதவுகிறது. இலையில் உள்ள யூஜெனோல் மற்றும் மைர்சீன் என்ற இரண்டு சேர்மங்கள், அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது.

எனவே, பிரியாணி இலையை எரித்த பின் அதில் இருந்து வரும் வாசனையானது, மூளையின் நரம்புகளை ரிலாக்ஸ் அடைய செய்து, மன உளைச்சலை நீக்குகிறது. இந்த இலையில் இருந்து வரும் புகையானது ஒவ்வாமை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. இது தொண்டை மற்றும் மூக்கு பகுதியில் உள்ள வீக்கங்களை நீக்க உதவுகிறது. வீட்டில் துர்நாற்றம் வீசினால், இந்த இலையை எரிக்கும் போது அதில் இருந்து வெளி வரும் புகையானது துர்நாற்றத்தை நீக்குகிறது.

ஒரு பாத்திரத்தில் இரண்டு அல்லது மூன்று பிரியாணி இலையை எடுத்துக் கொண்டு அறையினுள் சென்று, ஜன்னல் மற்றும் கதவுகளை அடைத்துக் கொண்டு, பிரியாணி இலையை எரித்துவிட்டு அறையை விட்டு வெளியே வந்துவிட வேண்டும். பின் 10 நிமிடங்கள் கழித்து மீண்டும் அறைக்குள் சென்று, அந்த புகையை சுவாசிக்க வேண்டும். இவ்வாறு 5-7 முறை செய்தால், நமது உடல் ஆரோக்கியம் மேம்படுவதுடன், மன ஆரோக்கியமும் மேம்படுகிறது.

Read More : பிணங்களுடன் உடலுறவு கொள்ளும் அகோரிகள்..!! காரணம் தெரிஞ்சா ஆடிப்போவீங்க..!! ஏன் தெரியுமா..?

Tags :
அதிசயம்ஆரோக்கிய நன்மைகள்உடல் ஆரோக்கியம்பிரியாணி இலை
Advertisement
Next Article