மரங்களே இல்லாத நாடு பற்றி தெரியுமா? கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஒரு மரம் கிடையாது..! என்ன காரணம் தெரியுமா..?
உலகில் மரங்களே இல்லாமல் இரண்டு நாடுகள் உள்ளன. அவற்றை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
நாம் வாழும் இந்த பூமியில் ஏராளமான இயற்கை வளங்கள் உள்ளன. அவற்றில் முதன்மையானது மரங்கள். மரங்கள் மனிதர்கள் சுவாசிப்பதற்காக காற்றில் இருக்கும் கார்பன் டை ஆக்சைடை எடுத்துக்கொண்டு ஆக்சிஜனை வெளியிடுகிறது. அதை தான் மனிதர்கள் சுவாசிக்கின்றனர். இந்த நிலையில் மரங்களே இல்லாமல் போனால் என்னவாகும். நினைத்து கூட பார்க்க முடியாது அல்லாவா?. ஆனால் உலகில் மரங்களே இல்லாமல் நாடுகள் உள்ளன என்பது உங்களுக்கு தெரியுமா?.
இந்த பட்டியலில் இரண்டு நாடுகள் உள்ளன. அங்கு கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மரங்கள் தென்படுவதில்லை. எப்படியாவது ஒரு மரத்தையாவது கண்டுபிடித்துவிட வேண்டும் என்று நினைத்தால் ஏமாற்றமே மிஞ்சும். அப்படி ஒரு நாடு தான் க்ரீன்லேண்ட்.. இதன் பெயரைக் கேட்டாலே இந்த இடம் பசுமை நிறைந்ததாக இருக்கும் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. இந்த நாட்டில் ஆயிரக்கணக்கான மைல்களுக்கு ஒரு மரத்தைக் கூட பார்க்கவே முடியாது. உலகின் மிகப்பெரிய தீவு என்றால் அது கிரீன்லாந்து தான். இந்த இடம் முழுவதும் பனிப்பாறைகள் சுற்றிலும் காணப்படும்.
பெயரிலே பசுமை வைத்திருக்கும் இந்த நாட்டில் ஒரு மரம் கூட இல்லை. இங்கு கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பனி முகடுகள் மட்டுமே காணப்படும். இந்த நாட்டில் பசுமையான இடத்தை பார்ப்பது சற்று கடினமானது. மரங்கள் இல்லாத நாடுகளின் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்திருப்பது கத்தார். கத்தார் முன்பு பாலைவனமாக இருந்தது. தற்போது அங்கு உயரமான கட்டிடங்களும், சுற்றிலும் மணல் மட்டுமே உள்ளன.
மிகப்பெரிய எரிவாயு இருப்புக்களுக்கு பெயர் பெற்ற இந்த நாடானது, சவுதி அரேபியா மற்றும் பாரசீக வளைகுடாவால் சூழப்பட்டுள்ளது. இந்த நாடு முழுவதும் பாலைவனமாக இருப்பதால், இங்கு எங்கும் ஒரு செடியைக் கூட உங்களால் காண முடியாது. எண்ணெய் இருப்பு மற்றும் முத்து உற்பத்தி காரணமாக, இந்த நாடு உலகில் பணக்கார நாடுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இருப்பினும், இங்கு மரங்கள் இல்லாததால், பழங்கள் மற்றும் பூக்களுக்கு பிற நாடுகளை சார்ந்துள்ளது. அங்கு ஒரு மரம் கூட இல்லை. இதனால் அந்த நாட்டு மக்கள் அங்கு மரம் வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த பட்டியலில் அண்டார்டிகாவும் உண்டு. இந்த நாட்டில் 98% பனிக்கட்டியால் சூழப்பட்டுள்ளது. இது உலகிலேயே மிகவும் குளிரான இடமாகக் கருதப்படுகிறது. கோடை காலத்தில் கூட இங்கு சராசரியாக வெப்பநிலை 20 டிகிரியாக இருக்கும் என்பதால், தாவரங்கள் வளர சாத்தியக் கூறுகள் கிடையாது.
Read more ; ‘பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு தடுப்பூசி..!’ அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் நடவடிக்கை