முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

’ஒரு கடை கூட கிடையாது’..!! கொள்கையுடன் வாழும் கிராமம்..!! அதுவும் நம்ம தமிழ்நாட்டில்..!!

Virudhunagar district, which is progressing in trade, is generating good economy in South Tamil Nadu. But there is a strange village in this district which has no shops till now. That is what we are going to see in this post.
10:26 AM Jun 18, 2024 IST | Chella
Advertisement

வர்த்தகத்தில் முன்னேறி வரும் விருதுநகர் மாவட்டம் தென் தமிழகத்திலேயே நல்ல பொருளாதாரத்தை ஈட்டி வருகிறது. ஆனால், இதுவரை கடைகளே இல்லாத ஒரு விநோத கிராமம் இந்த மாவட்டத்தில் தான் உள்ளது. அதுபற்றி தான் இந்தப் பதிவில் பார்க்க இருக்கிறோம்.

Advertisement

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பூசாரிப்பட்டி என்ற கிராமம் அமைந்துள்ளது. விவசாயத்தையும், பட்டாசையும் பிரதான தொழிலாக கொண்டுள்ள இந்த கிராமத்தில் சுமார் 150 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்தில் தான், 100 ஆண்டுகளாக கடைகள் இன்றி காணப்படுவதாக கூறப்படுகிறது. இதற்கு என்ன காரணம் என்று விசாரித்தபோது இவ்வூரில் பீடி, சிகரெட் போன்ற பொருட்களின் பயன்பாடு இருக்க கூடாது என்பதற்காக பல ஆண்டுகளுக்கு முன்பாகவும் முன்னோர்கள் கடை வைக்க கூடாது என முடிவு செய்து அதை இன்றும் கடைபிடித்து வருவதாக சொல்லப்படுகிறது.

இது பற்றி பூசாரிப்பட்டியை சேர்ந்த ஒருவர் கூறுகையில், ”பீடி, சிகரெட் பயன்பாட்டை கட்டுப்படுத்த இன்று வரை கடைகள் வைக்கப்படாமல் உள்ளது. ஒரு வேளை கடை வைத்தால் பீடி, சிகரெட் வந்து விடும் என்பதால் இன்று வரை ஊருக்குள் அனுமதிக்காமல் இருக்கிறோம். கடைகள் இன்றி இருப்பது தங்களின் அநாவசிய செலவுகளை கட்டுப்படுத்த உதவுகிறது” என்றார்.

இன்று பெரும்பாலான மக்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகி வரும் நிலையில், தனது ஊர் மக்கள் பீடி, சிகரெட் பொருட்களுக்கு அடிமையாகி விட கூடாது என்பதற்காகவே ஒரு கிராமமே கடைகள் இன்றி இருப்பது தற்போதைய காலகட்ட மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read More : பட்டா மாற்றம்..!! அதிரடி அறிவிப்பை வெளியிட்ட தமிழ்நாடு அரசு..!! மக்களே இனி கவலை வேண்டாம்..!!

Tags :
Agriculturevillageviruthunagar
Advertisement
Next Article