முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

Autism: நோயல்ல!... குறைப்பாடு மட்டுமே!... இன்று உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம்!

06:00 AM Apr 02, 2024 IST | Kokila
Advertisement

Autism: கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் ஐ.நா.வின் அறிவுறுத்தலின் பேரில் உலகம் முழுவதிலும் ஆட்டிச விழிப்புணர்வு தினம் ஏப்ரல் 2ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. மதியிறுக்க நோய் ஆட்டிசம் (ASD) என்று சுருக்கமாக சொல்லப்படுகிறது. பொதுவாக குழந்தை பிறந்து 3 அல்லது 4 மாதங்களில் இருந்து வெளி நபர்களிடம் போனால் அழும் போது அவங்க அம்மா அப்பாவ தெரிஞ்சுகிடுச்சாம் அழுகுது என்று நம் வீட்டு பெரியவர்களை சொல்வதை மிக இயல்பாக எல்லோரும் கேட்டிருப்போதும். அதில் உண்மை இல்லாமல் இல்லை குழந்தைகள் வளர வளர நம் கண்களை பார்த்து பேச வேண்டும்.

Advertisement

நம் குரலை கேட்டால் திரும்பி பார்க்க வேண்டும். அதே சமயம் குழந்தைகள் வளர வளர இந்த செயல்பாடுகளும் படிப்படியாக அதிகரிக்கும். ஆனால் அப்படியில்லாமல் குழந்தைகள் கொஞ்சம் வளர்ந்த பின்னரும் உங்கள் கண்களை பார்த்து பேசாவிட்டால், எவ்வளவு கூப்பிட்டாலும் பார்க்கா விட்டாலோ, அல்லது மற்ற குழந்தைகளை அடித்து வைப்பது போன்ற முரட்டு தனமாக செயல்களில் ஈடுபட்டாலோ பெற்றோர் குழந்தைகளை கண்டிப்பதை விட முக்கியம் அவர்களுக்கு ஆட்டிசம் போன்ற குறைபாடுகள் ஏதேனும் இருக்கிறதா என்பதை கவனிக்க வேண்டும்.

ஆட்டிசம் என்றால் என்ன? ஆட்டிசம் குழந்தைகளை தாக்கும் முளை வளர்ச்சிக் குறைபாடு கொண்ட நோய். இந்த நோயை முற்றிலும் குணப்படுத்த உலக அளவில் தொடர்ந்து இன்றளவும் பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உலக அளவில் 68க்கு ஒரு குழந்தை ஆட்டிசத்தின் பிடியில் உள்ளது. இந்தியாவில் 100 குழந்தை களுக்கு ஒரு குழந்தை இந்த குறைபாட்டோடு பிறக்கிறது. பல்வேறு ஆராய்ச்சிகள் மூலம் இந்த குறைபாட்டை போக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தியாவில் 20 லட்சம் பேர் இந்த குறைபாடு உள்ளவர்களாக இருக்கின்றனர். மேலும் இந்த அளவானது ஆண்டுதோறும் அதிகரிக்கவே செய்கிறது.

ஆட்டிசத்தின் அறிகுறிகள்: ஆட்டிசம் குழந்தைகளின் சமூக தொடர்பும், மொழி ஆதிக்கமும் மிக குறைவாக இருக்கும். அவர்களின் கண்தொடர்பு மிக மிக குறைவாக இருக்கும். அதேபோல் சமூகத்துடனான தொடர்பு மிகவும் குறைவாக இருக்கும் எடுத்துக்காட்டாக தெரிந்தவர்களை பார்த்தவுடம் இயல்பாக சிரிப்பது போன்ற நடவடிக்கைகள் ஆட்டிசம் குழந்தைகளிடம் இருக்காது. பெயரை சொல்லி அழைத்தால் திரும்பி பார்க்க மாட்டார்கள்.

பொதுவாக தன் வயது ஒத்த குழந்தைகளுடன் கூட இணைந்திருக்கமாட்டார்கள். எப்போதும் தனியா இருக்கவே விரும்புவார்கள். யாரைப்பார்த்தும் கைகாட்ட மாட்டார்கள், கைகளை அசைத்து அவர்களால் பேச முடியாது. குறிப்பாக ஆட்காட்டி விரலை காட்டி பேச மாட்டார்கள். இதேபோல் ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் ஒன்றரை வயது ஆன பின்னர் கூட ஒரு வார்த்தை கூட பேச மாட்டார்கள். இந்த குறைபாடுகள் எல்லாம் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கெள்வது அவசியம்.

ஆட்டிசம் பாதித்த பிரபலங்கள்: ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஏதேனும் ஒரு வித சிறப்பு ஆற்றல் இருக்கும். அந்த ஆற்றலை பெற்றோர் கண்டறிந்து தூண்டி விட்டால் அவர்கள் அந்த துறையில் சிறந்து விளங்க வாய்ப்புள்ளது. அதற்கு எடுத்துக்காட்டுதான் சர் ஐசக் நியூட்டன், பில் கேட்ஸ், ஸ்டீவ் ஜாப்ஸ் ஆகியோர் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட சில பிரபலங்கள்; இவர்களின் திறனை உரிய வகையில் பயன்படுத்தியதன் காரணமாக அரிய சாதனைகளால் உலக வரலாற்றில் இடம் பிடித்தனர்.

ஆட்டிசம் காரணம்: ஆட்டிசம் ஏற்பட காரணமாக குறிப்பிட்டு எதையும் சொல்ல முடியாது. மரபு ரீதியான காரணங்கள் குறைவு தான். சராசரி வயதை தாண்டி குழந்தை பெற்றுக் கொள்வது, மதுப் பழக்கம், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் போன்றவை காரணமாக சொல்லப்படுகிறது. ஆனால் இதுவரை உறுதி செய்யப்பட வில்லை. இந்த நிலையில் தான் கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் ஐ.நா.வின் அறிவுறுத்தலின் பேரில் உலகம் முழுவதிலும் ஆட்டிச விழிப்புணர்வு தினம் ஏப்ரல் 2ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.

மீட்கும் வழிகள்: ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை எப்போதும் அன்புடன் நடந்து கொள்ள வேண்டும். உரிய மருத்துவ சிகிச்சையோடு தேவையான பயிற்சியும் கொடுக்கும் பட்சத்தில் அந்த குழந்தைகளும் இந்த உலகில் சாத்திக்க முடியும். அதற்கு ஆட்டிசம் பெற்ற குறைபாடு உடைய பெற்றோருக்கு இந்த சமூகமும் உறுதுணையுடன் இருப்பதை நாம் அனைவரும் உறுதி செய்வோம்.

Readmore: Exam: தேர்வு தேதி மாற்றமா?… கோடை விடுமுறையில் மாற்றம் இல்லை!பள்ளிக்கல்வித்துறை விளக்கம்!

Tags :
Autismஉலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம்
Advertisement
Next Article