For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பலித்தது நாஸ்டர்டாமஸின் கணிப்பு! - இதுதான் மூன்றாம் உலக போரா?

12:15 PM Apr 16, 2024 IST | Mari Thangam
பலித்தது நாஸ்டர்டாமஸின் கணிப்பு    இதுதான் மூன்றாம் உலக போரா
Advertisement

இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, மூன்றாம் உலகப்போர் குறித்த நாஸ்ட்ரடாமஸின் கணிப்பு பலித்துள்ளதாக மக்கள் சமூக ஊடகங்களில் கருத்துக்கள் தெரிவிக்கத் துவங்கியுள்ளனர்.

Advertisement

1503 ஆம் ஆண்டு பிரான்ஸில் பிறந்ததாக கூறப்படும் மைக்கேல் டி நாஸ்டர்டாமஸ் 1566ஆம் ஆண்டு மரணமடைந்தார். தனது வாழ்நாளில் ஏகப்பட்ட கணிப்புகளை பதிவு செய்துள்ளார் நாஸ்டர்டாமஸ். நாஸ்டர்டாமஸின் Les Propheties என்ற புத்தகத்தில்தான் 942 கவிதை தொகுப்புகளாக உலக நிகழ்வுகளை கணித்துள்ளார். அவரது கணிப்புகளில் ஹிட்லரின் எழுச்சி, அமெரிக்க அதிபர் ஜோன் எஃப் கென்னடி படுகொலை, இரண்டாம் உலகப் போர், 9/11 தாக்குதல்கள் மற்றும் பிரெஞ்சுப் புரட்சி போன்றவை அப்படியே பலித்தன.

நாஸ்ட்ரடாமஸின் 2024ஆம் ஆண்டு குறித்த கணிப்பு ஒன்றில், அவர் 'Red adversary will become pale with fear, putting the great Ocean in dread' என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது, சிவப்பு எதிரி பயத்தில் வெளிறிப்போக, பெரிய சமுத்திரம் அச்சத்தில் மூழ்கும் என அவர் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த கணிப்பு இஸ்ரேல் - ஹமாஸ் போர் மூலம் பெரும் போர் வெடிக்கும் என்று நாஸ்டர்டாமஸ் கணித்து கூறியது தற்போது பலித்துள்ளதாக சிலர் கருதுகின்றனர்.

சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், புரட்சிப்படை மூத்த தளபதி உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இதனால் இஸ்ரேல் மீது ஈரான் கடும் கோபத்தில் உள்ளது. இந்த தாக்குதலையடுத்து எந்நேரமும் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தலாம் என்று பதற்றம் நிலவி வந்தது. அது தொடர்பான செய்திகள் ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் தொடர்ந்து வெளியாகிக்கொண்டிருக்க, மூன்றாம் உலகப்போர் நெருங்கிவிட்டதாக மக்கள் அச்சப்படத் துவங்கியுள்ளனர்

Tags :
Advertisement