மோடி பிரதமராவதை 1555ஆம் ஆண்டே கணித்த நாஸ்ட்ராடாமஸ்..!! 2026இல் மீண்டும் ஆட்சி மாற்றம்..? பரபரப்பு தகவல்..!!
2024 மக்களவை தேர்தல் குறித்து பல நிபுணர்கள் கணித்திருந்தாலும், பிரபல தீர்க்கதரிசி நாஸ்ட்ராடாமஸ் மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவது குறித்து என்ன கணித்திருந்தார் தெரியுமா? இதுகுறித்து மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜிஜு சமீபத்தில் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.
நரேந்திர மோடியின் எழுச்சியை 469 ஆண்டுகளுக்கு முன்பே, அதாவது 1555ஆம் ஆண்டில் பிரெஞ்சு ஜோதிடர் நோஸ்ட்ராடாமஸ் கணித்ததாக அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரது பதிவில், ”2014 முதல் 2026 வரை, ஒரு நபர் இந்தியாவை வழிநடத்துவார் என்று பிரெஞ்சு தீர்க்கதரிசி நோஸ்ட்ராடாமஸ் கணித்துள்ளார். முதலில், மக்கள் வெறுப்பார்கள். ஆனால், பிறகு மக்கள் அவரை மிகவும் நேசிப்பார்கள், அவர் நாட்டின் அவலத்தையும், திசையையும் மாற்றுவார்.
ஒரு நடுத்தர வயது சுப்பர்பவர் கொண்ட நிர்வாகி இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதிலும் பொற்காலத்தை கொண்டு வருவார். அவரது தலைமையில் இந்தியா உலகளாவிய மாஸ்டர் ஆக மட்டுமல்ல, பல நாடுகளும் இந்தியாவின் ஆதரவின் கீழ் வரும். 2014 முதல் இந்துக்கள் ஆட்சி செய்வார்கள். ஆசியாவில் அவர்களை எதிர்க்க யாரும் இருக்க மாட்டார்கள். இந்தியாவின் பிரதமர் குஜராத்தை சேர்ந்தவராக இருப்பார். அவரின் தந்தை கடையில் டீ விற்பவராக இருப்பார். அவரின் முதல் பெயர் நரேந்திர” என்று நாஸ்ட்ராடாமஸ் கணித்துள்ளதாக கிரண் ரிஜுஜு தெரிவித்துள்ளார்.
இதில், மற்றொரு முக்கியமான விஷயத்தையும் கவனிக்க வேண்டியுள்ளது. அதாவது, புதிய அரசின் பதவிக்காலம் 2024 - 2029 வரை இருக்கும் நிலையில் அவர் 2026 வரை தான் மோடி பிரதமராக இருப்பார் என்று கணித்துள்ளார். இதனால் தற்போது மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமைந்தால் கூட அது 2026 வரை தான் நீடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால், மத்தியில் ஆட்சி அமைக்க தேவையான 272 இடங்களில் எந்த கட்சியும் வெற்ற பெறாததால் கூட்டணி ஆட்சி அமைய இருக்கிறது.
தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் கூட்டணி உதவியுடன் தான் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. 2014, 2019-ஐ தொடர்ந்து 2024ஆம் ஆண்டில் பாஜக ஆட்சி அமைக்க உள்ளது. இதை எல்லாவற்றையும் கடந்து பாஜக கூட்டணி கட்சிகள் உதவியுடன் ஆட்சி அமைத்தால் கூட, நாஸ்ட்ராடமஸின் கணிப்பின் அந்த ஆட்சி 2026 வரை மட்டுமே நீடிக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Read More : ராஜினாமா செய்தார் மோடி..!! குடியரசுத் தலைவருக்கு கடிதம்..!! 8ஆம் தேதி மீண்டும் பிரதமராக பதவியேற்பு..!!