முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பருவமழை கால எச்சரிக்கை..! உடனே உங்க மொபைலில் இந்த செயலி டவுன்லோட் பண்ணுங்க...!

06:25 AM Oct 11, 2024 IST | Vignesh
Advertisement

வடகிழக்கு பருவமழை காலத்தில் மழை வெள்ளம் குறித்த தகவல்களை முன் கூட்டியே எளிதாக பொதுமக்கள் உடனுக்குடன் அறிந்து கொண்டு எச்சரிக்கையாக இருக்கும் பொருட்டு தமிழக அரசு டி.என்.அவர்ட் (TNAlert App) என்ற செல் போன் செயலியை அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலி மூலமாக பொதுமக்கள் தங்கள் இருப்பிடம் சார்ந்த வானிலை மற்றும் முன்னெச்சரிக்கை செய்திகளை தமிழிலேயே அறிந்துகொள்ளலாம்.

Advertisement

இதில் அடுத்தடுத்த 4 நாட்களுக்கான வானிலை அறிவிப்பு, தற்போதைய வானிலை, தினசரி மழை அளவு, செயற்கைக்கோள் புகைப்படங்கள், பேரிடர் காலத்தில் பாதிக்கக்கூடிய பகுதிகளின் விவரங்கள், பேரிடரின் போது செய்ய கூடியவை. செய்யக்கூடாதவை. தங்களது இருப்பிடத்திற்கு அருகில் உள்ள நீர்த்தேக்கங்களின் நீர் இருப்பு விவரம் போன்ற விவரங்களை எளிதாக தெரிந்துகொள்ளலாம்.

பேரிடர் காலத்தில் எச்சரிக்கை

மேலும், இந்த செயலியின் மூலம் மழை, வெள்ளம் தொடர்பான புகார்கள் தெரிவித்தால் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும், 24x7 இயங்கும் இலவச தொலை பேசி எண். 1077 (04342-231077) என்ற எண்ணிலும் பேரிடர் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம். (TN Alert App) டி.என். செயலியை கூகுள் பிளே ஸ்டோர். ஐ.ஓ.எஎஸ் ஆப் எஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவதற்கு ஏதுவாக தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை முகமை மூலம் வசதி செய்யப்பட்டுள்ளது.

பேரிடர் காலத்தில் எச்சரிக்கை நிலவரங்கள் குறித்து அறிய மிகவும் பயனுள்ளதாக உள்ள (TNAlert App) டி.என்.அலர்ட் என்ற செல்போன் செயலியை பொதுமக்கள் அனைவரும் மற்றும் அனைத் துறை அலுவலர்கள், முன்கள பணியாளர்கள் அரசு சாரா அமைப்பினர் அனைவரும் பதிவிறக்கம் செய்திட வேண்டும். மேலும், வடகிழக்கு பருவமழை காலத்தில் வானிலை தகவல்களை தெரிந்து கொள்ள, இந்த (TNAlert App) புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Tags :
rain alertTn alert appTn Rain
Advertisement
Next Article