வேகமெடுத்த நோரோ வைரஸ்!. ஒரே வாரத்தில் 91 பேர் பாதிப்பு!. CDC எச்சரிக்கை!. எவ்வளவு ஆபத்தானது தெரியுமா?
Norovirus: நோரோவைரஸ் வழக்குகள் அமெரிக்காவின் பல பகுதிகளில் பதிவாகியுள்ளன என்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) கூறுகிறது. CDC இன் படி, டிசம்பர் முதல் வாரத்தில் 91 நோரோவைரஸ் வழக்குகள் பதிவாகியுள்ளன. இதுவே சமீபத்திய ஆண்டுகளில் பதிவான அதிகபட்ச வழக்குகள் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.
கடுமையான வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும் தொற்றுநோய். தயாரிப்பின் போது மாசுபட்ட உணவு அல்லது நீர் முலம் அல்லது அசுத்தமான மேற்பரப்புகள் மூலம் இவை பரவுகின்றன. பாதிக்கப்பட்ட ஒருவருடன் தொடர்பு கொள்ளும் போது இவை பரவலாம். நோரோ வைரஸ் தொற்றுக்கு பிறகு 12 முதல் 48 மணி நேரத்துக்கு பிறகு வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, வாந்தி ஆகியவை தொடங்குகிறது.
நோரோ வைரஸ் 1 முதல் 3 நாட்கள் வரை நீடிக்கும். பெரும்பாலான மக்கள் சிகிச்சையின்றி முழுமையாக குணமடைகின்றனர். எனினும் சிறு குழந்தைகள் பெரியவர்கள் மற்றும் பிற மருத்துவ நிலைமைகள் உள்ளவர்களுக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு கடுமையாக இருக்கும். இதனால் நீரிழப்பும் மருத்துவ கவனிப்பும் தேவை.
நோரோ வைரஸ் காரணங்கள் என்ன? நோரோ வைரஸ் மலம் மற்றும் வாந்தி மூலம் பரவுகிறது. இது அசுத்தமான உணவு , நீர் மற்றும் மேற்பரப்புகள் மூலம் பரவுகிறது. இது வயிற்றுப்போக்கை தூண்டும் ரோட்டா வைரஸ் போன்றது. அசுத்தமான உணவை உண்பது, அசுத்தமான தண்ணீரை குடிப்பது.
கை அசுத்தமான மேற்பரப்பு அல்லது அதன் பொருள்களுடன் தொடர்பு கொண்ட பிறகு கையை வாயில் தொடுதல் போன்றவற்றின் மூலம் பரவுகிறது. மேலும் நோரோ வைரஸ் தொற்று உள்ளவர்களுடன் நெருங்கி பழகும் போது உண்டாகிறது. இதை அழிப்பது கடினம். இது வெப்பமான மற்றும் குளிர்ந்த வெப்பநிலை மற்றும் கிருமி நாசினிகளையும் தாங்கும் தன்மை கொண்டது.
நோரோ வைரஸ் பாதிக்கப்பட்ட 12 முதல் 48 மணி நேரத்துக்குள் அறிகுறிகளை தொடங்கும். 1 முதல் 3 நாட்கள் வரை நீடிக்கும். எனினும் குணமடைந்த பிறகும் பல வாரங்களுக்கு மலத்தில் வைரஸ் இருக்கலாம். மேலும் வேறு மருத்துவ நிலைமைகளில் இருப்பவர்கள் இந்த தொற்றுக்கு ஆளானால் இந்த வைரஸ் உதிர்வு பல மாதங்கள் வரை நீடிக்கலாம். இது பலருக்கும் பரவலாம். எளிதில் பரவும் இந்த தொற்று மலம் மற்றும் வாந்தி மூலம் வெளியேறுகிறது. நோயின் அறிகுறிகள் தொடங்கியது முதல் குணமடைந்த சில நாட்களுக்கு பிறகு வரை வைரஸ் பரவலாம். இது மேற்பரப்புகளில் நாட்கள் அல்லது வாரங்கள் வரை தங்கலாம்.
நோரோ வைரஸ் ஆபத்து யாருக்கு? தொற்று உள்ள ஒருவரால் உணவு கையாளப்பட்ட இடத்தில் சாப்பிடுவது குழந்தைகள் பள்ளி, நர்சரி பள்ளி அல்லது குழந்தை பராமரிப்பு மையத்தில் கலந்து கொள்வது, முதியோர் இல்லங்கள். நெருக்கமான இடங்களில் வசிப்பவர்கள், ஹோட்டல், உணவகங்கள், ரிசார்ட், கப்பல் போன்ற நெருக்கமான இடங்களில் நோரோ வைரஸ் தொற்று உள்ள ஒருவருடன் தொடர்பு கொள்ளும் போது பெரும்பாலான மக்களுக்கு பரவலாம்.
இது சில நாட்களுக்குள் மறைந்துவிடும் உயிருக்கு ஆபத்தானது அல்ல, ஆனால் பலவீனமானவர்கள், குழந்தைகள், வயதானவர்கள், கர்ப்பிணிகளுக்கு தொற்று கடுமையாக இருக்கலாம். நீரிழப்பு திவீரமானால் மரணத்தையும் உண்டு செய்யலாம்.
நோரோவைரஸிற்கான தடுப்பு நடவடிக்கைகள் என்ன? சோப்பு மற்றும் தண்ணீருடன் உங்கள் கைகளை நன்கு கழுவுதல், அசுத்தமான உணவு மற்றும் தண்ணீரைத் தவிர்ப்பது, பழங்கள் மற்றும் காய்கறிகளை கழுவுதல், கடல் உணவை முறையாக சமைத்தல், அசுத்தமான மேற்பரப்புகளை கிருமி நீக்கம் செய்தல்.