அசைவ உணவு ஆரோக்கியத்திற்கு கேடு..!! உயிருக்கு ஆப்பு வைக்கும் யூரிக் அமிலம்..? இந்த டிப்ஸை பாலோ பண்ணுங்க..!!
அசைவ உணவுகளை அதிகமாக சாப்பிடுவோருக்கு ரத்ததில் யூரிக் அமிலத்தின் சுரப்பு அதிகரித்து பல்வேறு உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படும் என்று மருத்துவர்கள் தகவல்கள் தெரிவித்துள்ளனர்.
அளவுக்கு அதிகமாக அசைவ உணவுகளை சாப்பிடுவதன் மூலம் அதிகளவில் யூரிக் அமிலம் உருவாவதை தூண்டும் என்று கூறப்படுகிறது. இந்த யூரிக் அமிலம் என்பது இரத்தத்தில் காணப்படும் தேவையற்ற கழிவாகும். இது பியூரின்ஸ் என்னும் கெமிக்கலை உடல் வெளியிடும்போது உருவாகக்கூடிய அமிலமாகும். அதிகப்படியான யூரிக் அமிலம் சுரப்பதை hyperuricemia என்று அழைக்கிறார்கள்.
இது கீல்வாதம் போன்ற பல வகையான நோய்களை உண்டாக்கும். இதுகுறித்து பேசிய டெல்லி மருத்துவர் அம்ரேந்திர பதக், யூரிக் அமிலம் என்பது உடலின் கழிவு. இது கல்லீரலில் சுரந்து சிறுநீரகத்திற்கு அனுப்புகிறது. பின் அது சிறுநீர் வழியாக வெளியேறும். யூரிக் அமிலம் மோசமான வாழ்க்கைமுறை, சிறுநீரகம் அல்லது கல்லீரல் பிரச்சனை, அதிகமாக பியூரின் மற்றும் அசைவ உணவுகளை உட்கொள்வதால் உருவாகிறது என்று கூறினார்.
அதிகமாக யூரிக் அமிலம் சுரக்கிறது எனில் ஆரம்பத்தில் அறிகுறிகள் தென்படாது என்றும், உடலில் அதிக வலி இருக்கும் அல்லது மூட்டுகளில் வலி இருக்கும். மூட்டுகளில் கதகதப்பான உணர்வு இருக்கும், அடிக்கடி சிறுநீர் கழிப்பீர்கள், சிறுநீரில் வித்தியாசமான துர்நாற்றம் வீசும். நுரை அதிகமாக இருக்கும். குமட்டல் அல்லது வாந்தி வரும் உள்ளிட்டவைகள் யூரிக் அமிலம் சுரப்பதற்கான அறிகுறிகள் என்றும் மருத்துவர் அம்ரேந்திர பதக் தெரிவித்துள்ளார்.
யூரிக் அமிலத்தின் உற்பத்தியை கட்டுப்படுத்த சில டிப்ஸ் : அசைவ உணவுகள் உட்கொள்வதை தவிர்க்கவும், ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு மாறவும், அதிக இனிப்பு கலந்த பானங்கள் பருகுவதை தவிர்க்க வேண்டும். உடற்பயிற்சி, உடல் உழைப்பு அவசியம் போன்றவைகளை கடைபிடிக்கவேண்டும் என்றும் மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார்.
Read More : மாதம் ரூ.1,34,907 சம்பளம்..!! காலிப்பணியிடங்கள் இருக்கு..!! விண்ணப்பிக்க மறந்துறாதீங்க..!!