பள்ளியில் மூன்று வயது சிறுமி டிஜிட்டல் பலாத்காரம்..!! வகுப்பு ஆசிரியரும் உடந்தை.. அதென்ன டிஜிட்டல் பலாத்காரம்? திகைத்த போலீஸ்..
நொய்டாவில் உள்ள தனியார் பள்ளியில் மூன்று வயது சிறுமியை டிஜிட்டல் ரீதியில் பலாத்காரம் செய்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது . இதன் கீழ் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து இருவரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு, முக்கிய குற்றவாளியான சிறுமியின் வகுப்பு ஆசிரியரையும், பாதுகாப்புப் பொறுப்பாளரையும் கைது செய்துள்ளனர்.
நொய்டாவை சேர்ந்த 3 வயது சிறுமி பிறப்புறுப்பில் கடுமையான வலியால் அவதி பட்டு வந்துள்ளார். இதனால் சிறுமியின் குடும்பத்தினர் அவளை மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர். சிறுமியின் அந்தரங்க உறுப்பை யாரோ துஷ்பிரயோகம் செய்ததாக மருத்துவர் தெரிவித்துள்ளார். சிறுமியிடம் கேட்டபோது, பள்ளியில் பணிபுரியும் ஒருவர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் காவல் நிலையம் சென்று வழக்குப் பதிவு செய்தனர். பள்ளியில் துப்புரவுப் பணியாளராக இருந்த நித்யானந்தாவை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் நடவடிக்கை எடுத்த போலீசார், சிறுமியின் வகுப்பு ஆசிரியர் மற்றும் பாதுகாப்பு மேற்பார்வையாளரை கைது செய்துள்ளனர். நொய்டா காவல்துறையின் ஊடகப் பிரிவு, சாட்சியங்களைச் சேகரித்த பின்னர், சம்பவத்தை மறைத்த குற்றத்திற்காக, பள்ளியின் பாதுகாப்புப் பொறுப்பாளர் தயமாய் மஹதோ மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமியின் வகுப்பு ஆசிரியை மது மெங்கானி ஆகியோர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்தனர்.
டிஜிட்டல் பலாத்காரம் என்றால் என்ன? இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது டிஜிட்டல் பலாத்காரம் என்ன என்பது குறித்து விசாரித்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஆங்கிலத்தில் டிஜிட் என்றால் கை, கால் விரல்களை குறிக்கிறது. அதாவது ஒருவரது அந்தரங்க உறுப்புகளுக்குள் ஒருவரின் அனுமதி இன்றி வலுக்கட்டாயமாக விரல்கள் அல்லது கால் விரல்களை நுழைப்பதை டிஜின் என்றும் டிஜிட்டல் பலாத்காரம் என்று அழைக்கப்படுகிறது. இத்தகைய டிஜிட்டல் பலாத்காரத்தை செய்த குற்றவாளிக்கு குறைந்தபட்சம் ஐந்தாண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் அல்லது பத்தாண்டுகள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.