ஆபாசம் வேண்டாம்!. அதைவிட சுவாரஸ்யம் தேவை!. பிரசவத்தை ஊக்குவிக்க புதினின் வித்தியாசமான யோசனை!
Putin: ரஷ்யாவில் பிரசவத்தை ஊக்குவிக்க ஆபாசம் இல்லாத அதைவிட சுவாரஸ்யமான ஒன்று தேவை என்று வித்தியாசமான யோசனைகளை அதிபர் புதின் வழங்கியுள்ளார்.
உலகில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வரும் நாடுகளில் ரஷ்யாவும் ஒன்றாக உள்ளது. குறிப்பாக, ரஷ்யாவில் பிறப்பு விகிதம் கடந்த 1990-லிருந்தே குறைந்து வருகிறது. உக்ரைனுக்கு எதிராக சுமார் இரண்டு வருட போரில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட ரஷ்யர்கள உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, குழந்தைப் பிறப்பை ஊக்குவிக்கும் வகையில் பல நடவடிக்கைகளில் ரஷ்ய அரசு ஈடுபட்டுள்ளது. குழந்தை பெற்றுக் கொள்வதற்கு பல சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், கடந்த ஆண்டு அதிபர் விளாடிமிர் புதின், ”ரஷ்ய பெண்கள் 8 அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும். இதை நடைமுறையாக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.
இருப்பினும், ஆபாசப் படங்களை மக்கள் பார்ப்பது ஆபத்தான அளவுக்கு அதிகரித்துள்ளது. ஆபாச படங்களை மக்கள் எளிதாக அணுகும் சூழல் நிலவுவதே இதற்கு முக்கிய காரணமாகும். மக்கள் தொகை பல நாடுகளில் சரிந்து வரும் நிலையில், அதற்கும் ஆபாசப் படங்களுக்கும் கூட தொடர்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதனால் ஆபாசப் படங்களைத் தடை விதிக்க வேண்டும் என்ற குரல்களும் எழுந்துள்ளன.
இந்தநிலையில், ரஷ்யாவில் பிரசவத்தை ஊக்குவிக்க ஆபாசம் இல்லாத அதைவிட சுவாரஸ்யமான ஒன்று தேவை என்று வித்தியாசமான யோசனைகளை அதிபர் புதின் வழங்கியுள்ளார். அதாவது ஆபாசப் படங்களுக்கு மாற்றாக மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையிலான சுவாரஸ்யமான மற்றும் உணர்ச்சி மிக்க கன்டென்டுகளை உருவாக்க வேண்டும் என்று அதிபர் புதின் வலியுறுத்தியுள்ளார்.
ரஷ்யாவில் மக்கள் அதிகளவில் ஆபாசப் படங்களுக்கு அடிமையாக இருப்பது தொடர்பாக அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் ஆபாசப் படங்கள் என்பது வெறுமன ரஷ்யாவுக்கு மட்டுமான பிரச்சினை இல்லை என்றும் அது உலகெங்கும் இருக்கும் ஒரு பிரச்சினை என்றும் அவர் குறிப்பிட்டார். அதாவது தடைகளைக் காட்டிலும் அதற்கு மாற்றாக நாம் எதை முன்மொழிகிறோம் என்பது முக்கியம். ஆபாசப் படங்களைப் காட்டிலும் மக்களை ஈர்க்கக்கூடிய மற்றும் சுவாரஸ்யமான கன்டெண்டுகள் நமக்குத் தேவை" என்று அவர் குறிப்பிட்டு இருந்தார்.
Readmore: விவசாயிகளே!. கொப்பரைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.420 உயர்வு!. மத்திய அமைச்சரவை ஒப்புதல்!