’உத்தரவு ஏதும் பிறப்பிக்க முடியாது’..!! ஓபிஎஸ் வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி..!!
அதிமுகவில் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட பதவி நீக்கம், தேர்தல் தொடர்பான தீர்மானங்களுக்கு தடை விதிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதி தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, எஸ்.வி.என்.பாட்டி உள்ளிட்டோர் அடங்கிய அமர்வு கடந்த டிசம்பர் 8ஆம் தேதி விசாரணை செய்தது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபாங்கர் தத்தா உள்ளிட்டோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்நிலையில், அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்ய வலியுறுத்தி ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் இடைக்கால உத்தரவு ஏதும் பிறப்பிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது ஓபிஎஸ் தரப்பினருக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
ஏற்கெனவே இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்ட நிலையில், உச்சநீதிமன்றத்தை நாடியிருந்தார் ஓபிஎஸ். இந்த வழக்கினை இன்று முதல் விசாரிக்கத் தொடங்கியிருக்கிறது உச்சநீதிமன்றம். தற்போதைய சூழ்நிலையில் பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதித்தால் அதிமுகவின் நிலை இன்னும் மோசமாகிவிடும்.