For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

’யாருமே எங்களை சேர்க்கல’..!! Lok Sabha தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்தே போட்டி..!! அதிரடியாக அறிவித்த கட்சி..!!

11:20 AM Feb 26, 2024 IST | 1newsnationuser6
’யாருமே எங்களை சேர்க்கல’     lok sabha தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்தே போட்டி     அதிரடியாக அறிவித்த கட்சி
Advertisement

தமிழ்நாட்டின் பெரிய அரசியல் கட்சிகளால் தொடர்ந்து புறக்கணிப்பட்டு வருவதால் இம்முறை தமிழ்நாடு, புதுச்சேரி என 40 மக்களவைத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடப் போவதாக விடுதலைக் களம் கட்சி அறிவித்துள்ளது.

Advertisement

எதிர்வரும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு சிறிய கட்சிகளுக்கும் மவுசு கூடியுள்ளது. அந்தக் கட்சிகளின் ஆதரவை பெறும் முனைப்பில் பெரிய கட்சிகள் தீவிரமாக உள்ளன. ஆனால், தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி அதனை ஏற்றுக்கொள்ளும் கட்சிகளுடன் தான் கூட்டணி என்று சிறிய கட்சிகள் டிமாண்ட் வைத்து வருகின்றன. இந்நிலையில் தமிழ்நாட்டில் விடுதலைக் களம் கட்சி, மற்ற கட்சிகளில் தொடர் புறக்கணிப்பால் தாங்கள் தனித்தே போட்டியிட போவதாக அறிவித்துள்ளது.

நாமக்கல்லில் விடுதலைக்களம் கட்சியின் மக்களவைத் தேர்தல் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. நிறுவனத் தலைவர் கொ.நாகராஜன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதில் தேர்தலில் தனித்து களம் காண்பது, வேட்பாளர்களைத் தேர்வு செய்வது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கொ.நாகராஜன், "பொதுக்குழுக் கூட்டத்தில், மக்களவைத் தேர்தல் வியூகங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. ராஜகம்பளம் தொட்டிய நாயக்கர் சமுதாயத்துக்கு அரசியல் பிரநிதித்துவம் அளிக்க வேண்டும்.

நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளான நிலையில், ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடி உயிர்நீத்த வீரபாண்டிய கட்டபொம்மன், விருப்பாச்சி கோபால நாயக்கர், ஊமைத்துரை, தளி எத்தலப்ப நாயக்கர் ஆகியோர் சமுதாயமான ராஜகம்பளம் தொட்டிய நாயக்கர் சமுதாயம் புறக்கணிப்படுவது தொடா் கதையாகி வருகிறது. இந்த சமுதாயத்தில் இருந்து ஒருவா் கூட மக்களவை வேட்பாளராக இதற்கு முன் நிறுத்தப்படவில்லை. சட்டப்பேரவைத் தொகுதிகளில் கூட ராஜகம்பளம் தொட்டிய நாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்தவா்களை வேட்பாளர்களாக நிறுத்த கட்சிகள் தயக்கம் காட்டுகின்றன.

அதனால், வரும் மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளடக்கிய 40 தொகுதிகளிலும் விடுதலைக்களம் கட்சி தனித்துப் போட்டியிடுவது என முடிவு செய்துள்ளது” என்று தெரிவித்தார்.

Read More : BREAKING | அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து..!! சென்னை ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு..!!

Advertisement