'ஜோபைடன் மற்றும் கமலாவை யாரும் கொல்ல முயற்சிக்கவில்லை..!!' - டிரம்ப் மீதான துப்பாக்கிச் சூடு குறித்து எலோன் மஸ்க்
அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் மீதான கொலை முயற்சியை தொழிலதிபர் எலான் மஸ்க் விமர்சித்துள்ளார் : அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை, அவர் புளோரிடாவின் வெஸ்ட் பாம் பீச்சில் உள்ள தனது கோல்ஃப் மைதானத்தில் கோல்ஃப் விளையாடிக் கொண்டிருந்தபோது, தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் பாதுகாப்பாகவும், நலமாகவும் இருப்பதாக தெரிவித்துள்ளார். அதே சமயம், இந்த விவகாரம் தொடர்பாக ரகசியப் பிரிவினரும் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். மேலும், இந்த தாக்குதலை நடத்தியதாக, ரியான் வெஸ்லி ரூத் என்பவரை அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். அந்த நபர்கள் டிரம்ப்பை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தினார்களா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகின்றது.
நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளராக டிரம்ப் போட்டியிடும் நிலையில், ஏற்கனவே, ஜூலை மாதம் பென்சில்வேனியாவில் தோ்தல் பிரசாரத்தில் டிரம்ப் ஈடுபட்டிருந்தபோது அவா் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. அப்போது, அவருடைய வலதுகாதில் காயம் ஏற்பட்டது. இந்த நிலையில், டிரம்ப் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது பதற்றத்தை அதிகரித்துள்ளது.
எலான் மஸ்க் விமர்சனம்
இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்த ஒருவர், டொனால்டு டிரம்ப்பை ஏன் கொல்ல முயற்சிக்கின்றனர்? என்று எக்ஸ் தளத்தில் கேள்வி எழுப்பி இருந்தார். அதனைப் பகிர்ந்த மஸ்க், டிரம்ப் மீதான தாக்குதலின் பின்னணியில் உள்ள நோக்கத்தை கேள்விக்குள்ளாக்கிய ஒரு இடுகைக்கு பதிலளிக்கும் விதமாக, "பைடன் மற்றும் கமலாவை யாரும் கொல்வதற்கான முயற்சிகூட செய்யவில்லை" என்று குறிப்பிட்டுள்ளார். அவரது கருத்துக்கள் விவாதத்தையும் சர்ச்சையையும் கிளப்பியுள்ளன, துணை ஜனாதிபதி ஹாரிஸுக்கு எதிரான ஜனாதிபதிப் போட்டிக்கு தயாராகி வரும் ட்ரம்ப்புக்கான அவரது ஆதரவைப் பிரதிபலிக்கிறது.
Read more ; B.E முடித்த நபர்களுக்கு மாதம் ரூ.80,000 வரை ஊதியம்…! மத்திய அரசு நிறுவனத்தில் வேலை…!