For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

’இனி டாஸ்மாக் போக தேவையில்லை’..!! ’வீடு தேடி வரும் மதுபானம்’..!! தமிழ்நாட்டில் அமலாகிறது..?

Odisha and West Bengal already have permission for home delivery of liquor, and it is said that the companies are planning to implement this by obtaining permission in Tamil Nadu, Karnataka, Punjab, Goa, Kerala and other states.
03:57 PM Jul 16, 2024 IST | Chella
’இனி டாஸ்மாக் போக தேவையில்லை’     ’வீடு தேடி வரும் மதுபானம்’     தமிழ்நாட்டில் அமலாகிறது
Advertisement

தமிழ்நாட்டில் மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று கூறப்பட்டு வரும் நிலையில், படிப்படியாக மதுபானக்கடைகள் குறைக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிற்கு மதுபானங்களின் விற்பனை மூலம் அரசுக்கு நல்ல வருவாய் கிடைத்து வருவதால் படிப்படியாக குறைக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. இதுவரை சுமார் 500 கடைகளுக்கு மேல் மூடப்பட்டுள்ளது. மேலும், மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் பகுதிகள் அனைத்தும் கண்டுபிடிக்கப்பட்டு அந்த பகுதிகளில் மதுபான கடைகளை மூடவும் திட்டமிட்டப்பட்டு வருகிறது.

Advertisement

இந்நிலையில், தமிழகத்தில் ஸ்விக்கி, சொமேட்டோ, பிக் பாஸ்கட் போன்ற நிறுவனங்கள் உணவு, காய்கறி மற்றும் மளிகைப்பொருட்களை டெலிவரி செய்து வருகிறது. தமிழகத்தில் வேலைக்கு செல்வோர் பலரும் இதில் ஆர்டர் செய்து பொருட்கள் மற்றும் உணவுகளை வாங்கி வருகின்றனர். எங்கிருந்து ஆர்டர் செய்தாலும் வீட்டிற்கே வந்து டெலிவரி செய்வதால் மக்கள் பலரும் இதில் ஆர்டர் செய்கின்றனர்.

இந்நிலையில், இந்த ஆப்கள் மூலம் மதுபானங்களை ஹோம் டெலிவரி செய்ய திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பீர், ஓயின் உள்ளிட்ட ஆல்கஹால் குறைவாக சேர்க்கப்பட்ட மதுபான வகைகளை ஆன்லைன் ஆர்டர் மூலம் ஹோம் டெலிவரி செய்ய திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. ஒடிசா, மேற்கு வங்கத்தில் ஏற்கனவே மதுபானங்களை ஹோம் டெலிவரி செய்ய அனுமதி உள்ள நிலையில் தமிழ்நாடு, கர்நாடக, பஞ்சாப், கோவா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் அனுமதி பெற்று இதனை நடைமுறைப்படுத்த நிறுவனங்கள் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

Read More : நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்..!! வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி..!! வானிலை மையம் எச்சரிக்கை..!!

Tags :
Advertisement