For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

நீங்கள் எந்த பூத்தில் வாக்களிக்க வேண்டும்..! தேடி அலைய வேண்டாம்…! கையில் செல்போன் இருந்தாலே போதும்..!

05:25 AM Apr 19, 2024 IST | Baskar
நீங்கள் எந்த பூத்தில் வாக்களிக்க வேண்டும்    தேடி அலைய வேண்டாம்…  கையில் செல்போன் இருந்தாலே போதும்
Advertisement

இன்று வாக்களிக்கவுள்ள வாக்காளர்களுக்காவே பிரத்யேக App ஒன்றை அறிமுகம் செய்துள்ளது தேர்தல் ஆணையம்.

18வது மக்களவைக்கான பொதுத் தேர்தல் 2024, ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக இன்று (ஏப்ரல் 19ஆம் தேதி) தேர்தல் நடைபெற உள்ளது. இன்றைய தினம் வாக்குப்பதிவு என்பதால் இன்று தான் சிலர் எந்த வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்க வேண்டும் எனத் தேடியும், தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா இல்லையா என்பதை தெரிந்துகொள்ள அவஸ்தைப்படுவார்கள். அப்படி பெயர் இல்லாத பட்சத்தில் அதிகாரிகளிடம் சண்டையிட்டு வாக்குவாதத்திலும் ஈடுபடுவார்கள். இதுபோன்ற பிரச்னைகளை தடுப்பதற்காகவே voter helpline என்ற App ஒன்றை அறிமுகம் செய்துள்ளது தேர்தல் ஆணையம்.

Advertisement

இந்த ஆப்-பை செல்போனில் பதிவிறக்கம் செய்து, வாக்காளர் பெயர் மற்றும் எப்பிக் எண் (வாக்காளர் அட்டையில் உள்ள எண்) ஆகியவற்றை டைப் செய்தாலே அனைத்து தகவல்களும் வந்து விடும். அதாவது எந்த வாக்குச்சாவடியில் நாம் வாக்களிக்க வேண்டும், எந்த பள்ளியில் வாக்குச்சாவடி மையம் உள்ளது என அனைத்து தகவல்களையும் இந்த App நமக்கு பிரத்யேகமாக வழங்கிவிடும். இந்த ஆப்-பை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்துமாறு தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

Read More: Bitcoin மோசடி : நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ.98 கோடி சொத்துகளை முடக்கியது அமலாக்கத்துறை!

Advertisement