இனி போக்குவரத்து நெரிசலே இருக்காது..!! 19 நிமிடங்களில் பறந்து போகலாம்..!! டிக்கெட் எவ்வளவு தெரியுமா..?
போக்குவரத்து நெரிசலை பொறுத்தவரை சென்னைக்கே டஃப் கொடுக்கும் நகரங்கள் இந்தியாவில் பல உள்ளன. அதில், மிக முக்கியமான நகரமாக பெங்களூரு இருக்கிறது. உலகின் மிகவும் கடுமையான போக்குவரத்து நெரிசலைக் கொண்ட நகரங்களின் பட்டியலில் பெங்களூரு முன்னணி இடம் உள்ளது. இந்நிலையில், இதனை கருத்தில் கொண்டு விரைவில் போக்குவரத்தை துரிதப்படுத்தும் நோக்கில் சர்ளா ஏவியேசன் (Sarla Aviation) எனும் பறக்கும் டாக்சி (Flying Taxi)-யை பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட உள்ளது.
பறக்கும் டாக்சியை பயன்பாட்டிற்குக் கொண்டு வருவதற்காக கெம்பேகவுடா பெங்களூரு சர்வதேச விமான நிலையம் உடன் கூட்டணியைத் தொடங்கி இருக்கின்றது. ஆகையால், விரைவில் பெங்களூருவில் பறக்கும் டாச்சி பயன்பாட்டிற்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்ளா ஏவியேசன், நகரத்தில் மின்சாரத்தில் இயங்கும் பறக்கும் டாக்சி (Electric flying taxi)யையே பயன்பாட்டிற்குக் கொண்டு வர இருக்கிறது.
அந்த வகையில், பெங்களுரு எலட்க்ட்ரானிக் சிட்டியில் இருந்து விமான நிலையத்திற்கு இடைய உள்ள 53 கி.மீ தூரம் வரை பறக்கும் டாக்ஸி அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. வெறும் 19 நிமிடங்களில் இலக்கினை அடையலாம் என்றும் இதற்கான கட்டணமாக ரூ.1,700 ஆக இருக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான உடன்படிக்கை நேற்று கையெழுத்தாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக 7 பேர் வரை பயணம் செய்யலாம்.
இந்தத் திட்டம் சாத்தியமாகும் நிலையில், இனி சாலை மார்க்கமாக பயணிக்கும் வசதி படைத்த மக்களுக்கு இது ஓர் வரப்பிரசாதமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும், குறைந்த கட்டணத்தில் விமானத்தில் பயணிப்பது போன்ற அனுபவத்தினைக் கொடுப்பதால் மிடில் கிளாஸ் மக்களும் இதில் எளிதாக பயணித்து மகிழ்ச்சி அடையலாம்.