சூப்பரோ சூப்பர்..!! வாகன ஓட்டிகளே இனி இந்த பிரச்சனையே வராது..!! வெளியான செம குட் நியூஸ்..!!
ஓபியூ எனப்படும் ஒரே ஒரு கருவியை வாகனத்தில் பொருத்திவிட்டால், வரும் காலத்தில் சுங்கச்சாவடிகள் என்பதே இல்லாமல் போகும். இந்த தொழில் நுட்பம் மீது மத்திய அரசு ஆர்வம் காட்டுவது ஏன் என்பதையும் இந்தப் பதிவில் பார்ப்போம்.
நாட்டின் பல ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. பெரும்பாலான தேசிய நெடுஞ்சாலைகள் நான்கு வழிச்சாலையாக மாறிவிட்டன. அங்கு ஒவ்வொரு 50 - 60 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்திதான் பயணிக்க முடியும். அதன்படி, தற்போது பாஸ்டேக் முறை அமலில் உள்ளது. இந்நிலையில், அதற்கு பதிலாக செயற்கை கோள் தொழில்நுட்பத்தில் புதிய கட்டண முறையை உருவாக்க மத்திய அரசு முயற்சித்து வந்தது.
அதன்படி 'பாஸ்டேக்' முறைக்கு பதில் செயற்கைக்கோள் அடிப்படையிலான 'குளோபல் நேவிகேஷன் சாட்டலைட் சிஸ்டம்' என்ற பயண தூர அடிப்படையில் சுங்க கட்டணம் வசூலிக்கும் முறையை மத்திய அரசு கொண்டுவரவுள்ளது. இந்த புதிய முறை குறிப்பிட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் அமல்படுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படியே, பெங்களூரு - மைசூர் தேசிய நெடுஞ்சாலை பிரிவிலும், ஹரியானா மாநிலத்தில் பானிபட் - ஹிசார் பிரிவிலும் சோதனை முறையில் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டது.
இந்த புதிய முறை, நாடு முழுவதும் சில நெடுஞ்சாலைகளிலும், விரைவுச்சாலைகளிலும் நேற்று முன்தினம் அமலுக்கு வந்துள்ளது. இதற்காக 2008ஆம் ஆண்டின் தேசிய நெடுஞ்சாலை கட்டண விதிகளில் புதிய திருத்தம் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு விரும்பும் 'குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம்' வேலை செய்ய ஓபியூ (ovum pick-up) என்ற கருவியை பொறுத்த வேண்டும். அதாவது செயற்கைக்கோள் இணைப்புக்கான ஆன்-போர்டு யூனிட் எனப்படும் சிறிய ஓ.பி.யு. கருவியை வாகனங்களில் பொருத்தப்படும். இந்த கருவி பொருத்தப்பட்ட வாகனம், சுங்க கட்டணம் வசூலிக்கும் சாலைகளில் பயணிக்கும் போது, நாளொன்றுக்கு முதல் 20 கி.மீ.க்கு கட்டணம் இல்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதன்பிறகு பயணிக்கும் தூரம், செயற்கைக்கோள் வழியாக கணக்கிடப்பட்டு, 'பாஸ்டேக்' போலவே வங்கிக்கணக்கில் இருந்து சுங்க கட்டணம் ஆட்டோமேட்டிக்காக பிடித்தம் செய்யப்படும். ஓ.பி.யு. கருவி வாயிலாக ஜி.பி.எஸ். தொழில்நுட்பத்தில் செயற்கைக்கோளுடன் இணைப்பு ஏற்பட்டு வாகன பயண தூரம் துள்ளியமாக கணக்கிடப்படும். குறிப்பிட்ட தொலைவுகளில் பொருத்தப்படும் கண்காணிப்பு கேமராவின் பதிவுகளும் செயற்கைக்கோளுடன் ஒருங்கிணைக்கப்பட உள்ளது. இந்த ஓ.பி.யு. கருவி அனைத்து வாகனங்களிலும் பொருத்தப்படும்போது சுங்கச்சாவடிகள் இந்தியாவில் தேவையற்றதாக மாறிவிடும்.
யாருக்கு லாபம்..? முன்பெல்லாம் வண்டியை எடுத்து 10 கிமீ போகும் போதே டோல்கேட் காரணமாக கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். ஆனால், இனி அப்படி இல்லை. அங்கு கட்டணம் செலுத்த வேண்டியதிருக்காது. அதேநேரம் ஒட்டுமொத்தமாக எத்தனை கிமீ ஓடியிருக்கிறது என்பதை பொறுத்து கட்டணம் வசூலிக்கப்படும் என்பதால், கண்டிப்பாக மத்திய அரசுக்கு இந்த திட்டத்தால் பெரிய லாபம் தான் ஏற்படும். உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கு வேண்டுமானால் திட்டம் ஓரளவு பயனளிக்கக்கூடியதாக இருக்கும். மாறாக பெரிய வாகனங்களுக்கு இந்த திட்டம் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Read More : ஆப்பு வைக்கும் சீன பூண்டு..!! தடையை மீறி தமிழ்நாட்டில் விற்பனை ஜோர்..!! மக்களே உஷார்..!! எல்லாம் விஷமாம்..!!