”இனி ரேஷன் பொருட்கள் பாக்கெட்டுகளில் விற்பனை”..! முதற்கட்ட பணியை தொடங்கிய தமிழ்நாடு அரசு..!!
தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் ரேஷன் அட்டை மூலமாக வழங்கப்படுகிறது. ரேஷன் அட்டையை பொறுத்து பொருட்கள் வழங்கப்படும் வீதமும், அளவும் மாறுபடும். ரேஷன் பொருட்கள் எடை குறைவாக வழங்கப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து ரேஷன் பொருட்களில் சுகாதாரம், எடை ஆகியவற்றை உறுதிப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. உணவு பொருட்கள் சுத்தமாக கிடைக்க வேண்டும், எடையில் ஏமாற்றம் இருக்கக் கூடாது என்பதால் பொருட்களை ரேஷன் கடைகளில் பாக்கெட்டுகள் மூலமாக வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், ரேஷன் கடைகளில் பாக்கெட் மூலம் பொருட்களை விநியோகம் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ரேஷன் கடைகளில் அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு உள்ளிட்ட பொருட்கள் பாக்கெட்டுகளில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சோதனை அடிப்படையில் சட்டசபை தொகுதிக்கு ஒரு ரேஷன் கடையில் இதுபோன்று பாக்கெட்டுகளில் பொருட்களை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சேலத்தில் ஒரு ரேஷன் கடையில் மட்டும் தற்போது பாக்கெட் மூலம் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
சோதனை அடிப்படையில், பொருட்களை பாக்கெட் மூலம் விநியோகம் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக சேலத்தில் உள்ள ஒரு ரேஷன் கடையில், தற்போது பாக்கெட் மூலம் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், தமிழகம் முழுவதும் தொகுதிக்கு ஒரு ரேஷன் கடை என தேர்வு செய்து, பாக்கெட் மூலம் பொருட்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கு மக்களிடம் இருந்து கிடைக்கும் வரவேற்பை பொறுத்து மற்ற கடைகளிலும் விரிவுபடுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
Read More : 120 அடியில் நீடிக்கும் மேட்டூர் அணை..!! நீர்வரத்து 1.70 லட்சம் கன அடியாக அதிகரிப்பு..!!