’இனி காவலர்கள் கட்டணமின்றி பேருந்தில் பயணிக்க முடியாது’..!! போக்குவரத்துத்துறை அதிரடி உத்தரவு..!!
காவலர்கள் கட்டணமின்றி பேருந்தில் பயணிக்க அனுமதி இல்லை என போக்குவரத்துத்துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. வாரண்ட் இருந்தால் மட்டுமே காவல்துறையினர் பேருந்தில் கட்டணமின்றி பயணிக்க முடியும் என்றும் மற்ற நேரத்தில் காவலர்கள் டிக்கெட் எடுத்து பயணிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி சென்ற பேருந்தில் காவலர் பயணச் சீட்டு எடுக்க மறுத்து வாக்குவாதம் செய்த நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், நாங்குநேரி காவலர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கவும் போக்குவரத்துத்துறை பரிந்துரை செய்துள்ளது.
பொதுவாக காவல்துறையினர் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பயணிக்கும்போது, அரசுப் பேருந்துகளில் டிக்கெட் எடுக்காமல் பயணிப்பது வழக்கம். இதன் காரணமாக, பேருந்து நடத்துனர்களுக்கும் காவல்துறையினருக்கும் அவ்வப்போது தகராறுகளும் ஏற்படும். அந்த வகையில் தான், நெல்லை மாவட்டத்தில் காவலருக்கும் நடத்துனருக்கும் இடையே நடைபெற்ற மோதல் தொடர்பான வீடியோ வைரலானது. இந்நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Read More : இது என்ன Bi-Directional மின் மீட்டர்..? ரூ.5,011 கட்டணமா..? என்ன நன்மைகள்..? மின்வாரியம் அதிரடி..!!