”ரேஷன் கடைகளில் இனி பாமாயில் கிடையாது”..!! ”மாற்று பொருள் இதுதான்”..!! அமைச்சர் சொன்ன குட் நியூஸ்..!!
தமிழ்நாட்டில் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்தாரத்திற்காக ரேஷன் கடைகள் மூலம் மானிய விலையில் உணவு பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால், லட்சக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில், ரேஷன் கடைகளில் ஒரு லிட்டர் பாமாயிலுக்கு பதில் 1/2 லிட்டர் தேங்காய் எண்ணெய் வழங்க குடும்ப அட்டைதாரர்களிடம் கருத்துக்கணிப்பு நடத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன் அடிப்படையில், விரைவில் அரசு இறுதி முடிவு எடுக்கும். ஏற்கனவே இரண்டு நாட்களுக்கு முன்பு ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் மற்றும் கடலை எண்ணெய்யை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் டிஆர்பி ராஜா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதன்படி, 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒவ்வொரு மாதமும் இலவச அரிசி, ஒரு கிலோ துவரம் பருப்பு, ரூ.30 ஒரு லிட்டர் பாமாயில், ரூ.25-க்கு மானிய விலையில் வழங்கி வருகிறது.
இந்நிலையில், ரேஷன் கடைகளில் தேங்காய் & கடலை எண்ணெய் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார். விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் நெல், கரும்பு, தேங்காயை மதிப்பு கூட்டும் பொருட்களாக மாற்ற வேண்டும் எனவும் அமைச்சர் டிஆர்பி தெரிவித்துள்ளார். சிறு, குறு விவசாயிகள் அரசிடம் கடன் பெறாமல் வருமானத்தை சேமிக்கும் வகையில் உற்பத்தியை அதிகரித்து வருவாயை பெருக்க வழிவகை வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.