For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தூள்...! இனி போலி பத்திர பதிவு.. சொத்து பட்டா..! அதிகாரிகளுக்கு அரசு ஸ்ட்ரீட் உத்தரவு...!

No more fake deed registration.. Property deed..! Government Street Order to Officers
06:58 AM Jul 19, 2024 IST | Vignesh
தூள்     இனி போலி பத்திர பதிவு   சொத்து பட்டா    அதிகாரிகளுக்கு அரசு ஸ்ட்ரீட் உத்தரவு
Advertisement

போலி மற்றும் அங்கீகாரமற்ற மனைப்பிரிவு பதிவுகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என துறை அமைச்சர் மூர்த்தி வலியுறுத்தி உள்ளார்.

தமிழகம் முழுவதும் பத்திர பதிவுக்கு வரும் சொத்துக்கு பட்டா உள்ளிட்ட வருவாய் துறை ஆவணங்கள் முறையாக உள்ளதா என்று பார்க்க வேண்டும். ஆவணங்களின் உண்மை தன்மையை சரிபார்க்க வேண்டும் அவற்றை நிராகரிக்க கூடாது. வருவாய் ஆவணங்களான பட்டா உள்ளிட்ட விஷயங்களை சரிபார்க்க வேண்டும். பொதுமக்களை தேவை இல்லாமல் அலைக்கழிக்க கூடாது. விவசாய நிலங்களை மனைப்பிரிவாக பதிவு செய்யக்கூடாது என பதிவுத்துறை அரசு செயலாளர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் சமிபத்தில் அறிவுறுத்தியிருந்தார்.

Advertisement

இந்த நிலையில் பதிவுத்துறை பணியின் போது மறைந்த 2 பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை அமைச்சர் மூர்த்தி வழங்கினார். கூட்டத்தில் பேசிய அவர்; அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் அங்கீகாரமற்ற மனைப்பிரிவை பதிவு செய்த அலுவலர்கள் கண்டறியப்பட்டு, அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அங்கீகாரமற்ற மனைப்பிரிவை பதிவு செய்யும் அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பதிவுத்துறையில் இந்த நிதியாண்டில் ஜூலை 17-ம் தேதி வரை ரூ.5,920 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இது கடந்த நிதியாண்டில் இதே நாளின் வருவாயுடன் ஒப்பிடும்போது ரூ.821 கோடி அதிகம் என்றார்‌.

அனைத்து துணை பதிவுத்துறை தலைவர்களும் தங்கள் எல்லைக்குட்பட்ட சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு திடீர் ஆய்வு செய்து பதிவுக்கு வரும் பொதுமக்களுக்கு எந்தவிதமான இடையூறும் இல்லாமல் ஆவணப்பதிவு செய்ய வேண்டும், ஆவணங்களை உரிய நேரத்தில் ஒப்படைப்பு, போலி மற்றும் அங்கீகாரமற்ற மனைப்பிரிவு பதிவுகளை தடுப்பது போன்ற பணிகளை தொடர்ந்து கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என துறை அமைச்சர் மூர்த்தி வலியுறுத்தி உள்ளார்.

Tags :
Advertisement