இனி ஆன்டிபயாடிக் மருந்துகளே வேண்டாம்…! இந்த மூலிகைகளை பயன்படுத்தி பாருங்கள்…!
உலகம் முழுவதும் நம்முடைய கண்களுக்கு தெரியாத பல நுண்ணுயிரிகள் உள்ளன. இதனால் நமக்கு நன்மைகள் இருந்தாலும் ஒரு சில பாக்டிரியாக்கள் மனித உடலில் தொற்றுகளை ஏற்படுத்துகிறது.
ஆன்டிபயாடிக் மருந்துகள் நம்முடைய உடலில் பாக்டீரியா தொற்றுக்கள் ஏற்படாமலும் ஏற்கனவே வந்த தொற்றுக்களையும் சரிசெய்கிறது. ஆனால் இயற்கையாகவே சில மூலிகைகள் ஆன்டிபயாடிக் மருந்துகளை போல நம்முடைய உடலில் வேலை செய்யும்.
நோய்த்தொற்று ஏற்பட்ட பிறகு ஆன்டிபயாடிக் மருந்துகள் எடுத்துக் கொள்வதைக் காட்டிலும் இயற்கையாக ஆன்டிபயாடிக் பண்புகள் கொண்ட மூலிகைகளை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் பாக்டீரியா தொற்றுக்களை தவிர்க்கலாம்.
தேன் : தேன் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. இதனை உணவில் எடுத்துக்கொள்வதன் மூலம் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
கிராம்பு : கிராம்பில் ஆன்டிபயாடிக் பண்புகள் அதிகம் உள்ளது. இது ஈகோலி போன்ற பாக்டீரியாக்களைத் தாக்கி அழிக்கும் தன்மை கொண்டது.
தழுதாழை: தழுதாழை ஆயுர்வேதத்தில் மிக முக்கியமான மூலிகைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இதில் ஆன்டிபயாடிக் பண்புகள் அதிகம் உள்ளது. நோய் தொற்றுக்களை எதிர்த்துப் போராடுகிறது. தழுதாழை இலைச்சாற்றை காலை மற்றும் மாலை நேரங்களில் தலா இரண்டு முதல் மூன்று தேக்கரண்டி அருந்திவந்தால், காய்ச்சல் நீங்கும்.
இஞ்சி : இஞ்சி நம்முடைய அன்றாட வாழ்வில் முக்கிய பங்களிக்கிறது. இதில் எதிர்ப்பு திறன் அதிகம் உள்ளது. பல்வேறு பருவ கால பிரச்சினைகளுக்கு தீர்வாகவும் அமைகிறது.
பூண்டு : பூண்டு வெறும் சமையலில் பயன்படுத்தும் பொருள் மட்டும் கிடையாது. இதனுள் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. ஆன்டி வைரல், ஆன்டி பாக்டீரியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு மருந்துகள் என்று இதன் மருத்துவ தன்மை ஏராளம் உள்ளது. இதுபோன்ற இயற்கை பொருட்களை எடுத்துக்கொண்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வோம்.