For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

’எந்த கட்சியாக இருந்தாலும் நாட்டில் பாஜகவை மட்டும் அசைக்க முடியாது’..!! அண்ணாமலை அதிரடி..!!

08:51 AM Jan 13, 2024 IST | 1newsnationuser6
’எந்த கட்சியாக இருந்தாலும் நாட்டில் பாஜகவை மட்டும் அசைக்க முடியாது’     அண்ணாமலை அதிரடி
Advertisement

தென் சென்னை நாடாளுமன்ற தொகுதி பாஜக செயல்வீரர் கூட்டத்தில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ”எதற்காக நாம் வெற்றி பெற வேண்டும் ? முதல் கேள்வி. பாஜகவின் தனிப்பட்ட ஈகோயை சரி பண்ணுவதற்கா. நமக்கு பதவி வெறி இருக்கா? ஜெயித்தே ஆக வேண்டும் என்று மற்ற கட்சிக்கு இருப்பது போல பதவி வெறி இருக்கிறதா? மற்ற கட்சியில் சில பேர் தொடர்ச்சியாக வேட்பாளராக இருக்கின்றனர். அவர்கள் குழந்தைங்க வேட்பாளரா இருப்பாங்க. அவர்கள் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக ஒரு கட்சியை உழைக்க வைக்கிறார்கள்.

Advertisement

அது நம்முடைய நோக்கமா? இல்ல நமக்கெல்லாம் வேற வேலையே இல்லாம, தேர்தல் வந்தா சும்மா போய் நிற்போம் என இருக்கிறோமா ? உங்களுக்கு தெரியும். பதில் உங்க கிட்டே இருக்கு. நாம் அனைவரும் இங்கே இணைந்து இருப்பது ஒரே ஒரு காரணமாக தான். இந்தக் கூட்டத்தில் யார் வேட்பாளராக இருந்தாலும், நம்முடைய கட்சி யாரை வேட்பாளராக நிறுத்தினாலும், நம்மைப் பொறுத்தவரை நாம் தாம் வேட்பாளர் என்ற உணர்வு தான் நாம் எல்லாரையும் ஒருங்கிணைக்கிறது.

அது தான் பாரதிய ஜனதாவின் வெற்றி. இத்தனை காலமாக பாஜகவை அசைக்க முடியாத ஒரு சக்தியாக நம் நாட்டில் இருக்கிறது என்றால், நம்மை பொருத்தவரை ஒரு வேட்பாளரையும், தொண்டனையும், பிரதமரையும் ஆட்சியில் இருக்கக்கூடிய அமைச்சர்களையும், எம்.எல்.ஏக்களையும், எம்பிக்களையும் பிரித்து பார்ப்பது கிடையாது. இந்த கட்சியை பொறுத்தவரை அனைவரும் சமம் என்கின்ற அற்புதமான சித்தாந்தத்தில் உருவான கட்சி” என்று பேசினார்.

Tags :
Advertisement