”எவ்வளவு சொல்லியும் கேட்கல”..!! பலமுறை விவாகரத்து..!! சொந்த சகோதரனுடன் கள்ளக்காதல்..!! தூக்கில் தொடங்கிய கணவன்..!!
குஜராத் மாநிலத்தில் மனைவி, அவரது சொந்த சகோதரனுடன் பாலியல் உறவில் இருந்ததை அறிந்த கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள தோல்கா பகுதியில் 35 வயது நபர் வசித்து வந்தார். கடந்த 2009இல் இவருக்கு திருமணம் நடைபெற்ற நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக 2017இல் மனைவியிடம் இருந்து விவகாரத்து பெற்றார். பின்னர், வேறொரு பெண்ணை இந்தாண்டு பிப்ரவரி மாதம் திருமணம் செய்து கொண்டார். மேலும், அந்த நபர் தனது தந்தையிடம் இருந்து விலகி வாழ்ந்து வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில், கடந்த நவம்பர் 7ஆம் தேதி அந்த நபர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில், தனது மகனின் தற்கொலை குறித்து அவரது தந்தை காவல்துறையிடம் பரபரப்பான புகாரை அளித்திருக்கிறார். அந்தப் புகாரில், மகனிடம் பேச்சுவார்த்தை இன்றி விலகி இருந்ததாக தெரிவித்த அவர், மகன் தற்கொலைக்கு முயன்றது குறித்து காவல்துறை தகவல் தெரிவித்ததாக கூறியிருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து மகனை பார்க்கச் சென்ற போது அவர் எழுதிய தற்கொலை கடிதம் கிடைத்ததாக தெரிவித்துள்ளார். அந்த கடிதம் குறித்து இறந்த நபரின் தந்தை கூறியிருக்கும் தகவல்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. அதில், தனது மகனின் இரண்டாவது மனைவிக்கு அவரது சொந்த சகோதரனுடன் பாலியல் உறவு இருந்ததாக தெரிவித்திருக்கிறார். இதனைத் தெரிந்து கொண்ட தனது மகன், மனைவி மற்றும் மனைவியின் சகோதரரை கண்டித்திருக்கிறார்.
இருப்பினும், அவர்கள் இதை பொருட்படுத்தாது தனது மகனை தாக்கியதாகவும் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக அவமானம் தாங்க முடியாமல் தனது மகன் தற்கொலை செய்து கொண்டதாக புகாரில் தெரிவித்திருக்கிறார். மேலும், தனது மகனின் இரண்டாவது மனைவிக்கு பலமுறை திருமணம் நடைபெற்று விவாகரத்து ஆகியிருக்கிறது. இவை அனைத்திற்கும் அந்தப் பெண்ணிற்கு அவரது சகோதரனுடன் இருந்த கள்ளக்காதல் தான் காரணம் எனவும் கூறியிருக்கிறார். இதனைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தற்கொலை செய்து கொண்ட நபரின் மனைவி, மனைவியின் சகோதரன் மற்றும் 3 குடும்ப உறுப்பினர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Read More : பிளிப்கார்ட் நிறுவனத்தில் வேலை..!! மாத ஊதியம் எவ்வளவு தெரியுமா..? உடனே அப்ளை பண்ணுங்க..!!