"எவ்வளவு சொல்லியும் திருந்தமாட்டியா"!. கணவரின் அந்த பழக்கம்!. 2 பெண்கள், ஒருவரையொருவர் திருமணம் செய்து கொண்டனர்!.
Womens married: உத்தரப்பிரதேசத்தில் மது அருந்தும் கணவர்களால் விரக்தியடைந்த 2 மனைவிகள் ஒருவரையொருவர் திருமணம் செய்துகொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உத்திரபிரதேச மாநிலம் கோரக்பூர் அருகே தியோரியா என்ற பகுதியை சேர்ந்தவர்கள் கவிதாவும், பப்லு ஆகிய இரண்டு பெண்கள். இவர்கள் கணவர்களுடன் வசித்து வந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் ஒருவரையொருவர் இணைத்து நண்பர்களாகினர். இவர்களது கணவர்கள் இருவரும் மது போதைக்கு அடிமையாகியுள்ளனர். இதனால் அடிக்கடி தம்பதிகளுக்கிடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதுமட்டுமல்லாமல், தினமும் குடித்து விட்டு வந்து மனைவிகளை அடித்து துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அவ்வபோது அந்த பெண்கள் தங்களது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
இதையடுத்து, இருவரும் தங்களுடைய பிரச்சனைகள் குறித்து பகிர்ந்துகொண்டு வந்துள்ளனர். இந்தநிலையில், விரக்தியில் இருந்த இரண்டு பெண்களும் ஒருவரையொருவர் திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்துள்ளனர். அதன்படி, கோவிலுக்கு சென்று பப்லு என்ற பெண் மாப்பிள்ளை வேடமிட்டு, கவிதாவின் நெற்றியில் பொட்டு வைத்து மாலைகள் மாற்றி ஒருவரையொருவர் திருமணம் செய்துகொண்டனர்.
இதுகுறித்து அந்த பெண்கள் கூறுகையில், “எங்கள் கணவர்களின் குடிப்பழக்கம் மற்றும் தவறான நடத்தையால் நாங்கள் வேதனையடைந்தோம். இது அமைதி மற்றும் அன்பான வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்க எங்களைத் தள்ளியது. நாங்கள் ஜோடியாக கோரக்பூரில் வாழ முடிவு செய்துள்ளோம் என்று கூறினர். தாங்கள் ஒன்றாக இருப்பதில் உறுதியாக இருப்பதாகவும், தங்களை யாரும் பிரிக்க அனுமதிக்க மாட்டோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.