For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

M.K.Stalin: எத்தனை ஆண்டுகள் ஆனாலும் பா.ஜ.கவால் தமிழகத்தில் வளரவே முடியாது...!

05:27 AM Apr 17, 2024 IST | Vignesh
m k stalin  எத்தனை ஆண்டுகள் ஆனாலும்  பா ஜ கவால் தமிழகத்தில் வளரவே முடியாது
Advertisement

பா.ஜ.க.வுக்கு அளிக்கும் வாக்கு, தமிழ்நாட்டு எதிரிகளுக்கு அளிக்கும் வாக்கு என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Advertisement

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற தி.மு.க தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்; பா.ஜ.க.வுக்கு அளிக்கும் வாக்கு, தமிழ்நாட்டு எதிரிகளுக்கு அளிக்கும் வாக்கு. அ.தி.மு.க.வுக்கு அளிக்கும் வாக்கு, தமிழ்நாட்டு துரோகிகளுக்கு அளிக்கும் வாக்கு. எனவே, தமிழ்நாட்டை வஞ்சித்த பா.ஜ.க, தமிழ்நாட்டைப் பாழ்படுத்திய அ.தி.மு.க. ஆகிய இருவரையும் ஒருசேர வீழ்த்துங்கள் என்றார்.

இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் தமிழ்நாட்டில் பா.ஜ.கவால் வளரவே முடியாது. மோடியின் கண்ணீரை அவரது கண்களே நம்பாது. பிறகு மக்கள் எப்படி நம்புவார்கள்? இப்போது புதிதாகப் பேட்டி என்ற பெயரில் ரீல் சுற்றிக்கொண்டு இருக்கிறார். நேற்று கொடுத்த ஒரு பேட்டியில் பிரதமர் மோடி சொல்கிறார். தமிழ்நாட்டில் தி.மு.க.வுக்கு எதிராக எதிர்ப்பு அலை வீசுகிறதாம். இதைக் கேட்டுச் சிரிப்பதா..! இல்லை, பிரதமரின் பகல்கனவை நினைத்து அவர் மேல் பரிதாபப்படுவதா என்று தெரியவில்லை.

பிரதமர் அவர்களே.. இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் தமிழ்நாட்டில் பா.ஜ.கவால் வளரவே முடியாது. கூட்டணிக்கும் உங்க கட்சிக்கும் ரவுடிகளையும், கலவரம் பண்ணுகிற Experts-களையும் சேர்த்துகிட்டு இருக்கீங்க. இந்த லட்சணத்துல பா.ஜ.க எப்படி வளரும்? நீங்கதான் எப்போதும் மக்களை ஏமாத்துவீங்கனு பார்த்தால் இப்போது உங்களையே தமிழ்நாட்டுல பா.ஜ.க ஜெயிக்கும் என யாரோ ஏமாத்த பாக்குறாங்க

நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில் பெண்களின் உரிமை மதிக்கப்படுகிறது. பெண்கள் முன்னேற்றத்திற்கான திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. பெண்கள் ஓதுவார்கள் ஆகியிருக்கிறார்கள், அர்ச்சகர்கள் ஆகியிருக்கிறார்கள். இப்படி முற்போக்குச் சிந்தனைகளோடு முன்னேறிக்கொண்டு இருக்கும் திராவிட மாடலைப் பார்த்தால் மோடிக்கு கசக்கத்தான் செய்யும் என்றார் ‌

Advertisement