மாலத்தீவு இல்ல!... முதல்வர் ஸ்டாலின் இங்கதான் போகிறார்!... ட்ரோன்கள் பறக்க தடை!
CM Stalin: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓய்வெடுப்பதற்காக நாளை(ஏப்ரல் 29) குடும்பத்துடன் கொடைக்கானல் செல்லவுள்ளதால், மே 4ம் தேதிவரை ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தலையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்தார். பொதுக்கூட்டங்களிலும் பங்கேற்று, கூட்டணி வேட்பாளர்களுக்காக வாக்கு சேகரித்தார். காலையில் நடைபயிற்சி செய்யும் போதும், வாக்காளர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதல்வர், ஓய்வெடுக்கும் வகையில் ஒரு வார பயணமாக, மாலத்தீவு செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இந்தநிலையில், நாளை(ஏப்ரல் 29) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடும்பத்துடன் கொடைக்கானல் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இதனால் கொடைக்கானலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதல்வர் கொடைக்கானல் பயணத்தை முன்னிட்டு நாளைமுதல் மே 4ம் தேதிவரை 5 நாட்கள் ட்ரோன் கேமராக்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட எஸ்.பி. பிரதீப் அறிவித்துள்ளார்.
மேலும், குடும்பத்தினருடன் தனிப்பட்ட பயணமாக செல்லும் அவர், அரசு பணிகளையும் அங்கிருந்து கவனிப்பார் என்று கூறப்படுகிறது. முன்னதாக, பிரதமர் மோடியை அவதூறாக விமர்சித்ததை தொடர்ந்து இந்தியர்கள், மாலத்தீவு சுற்றுலாவை புறக்கணித்து வருவது குறிப்பிடத்தக்கது.