போச்சா.! மாணவர்களுக்கு அதிர்ச்சி செய்தி.! பள்ளி கல்வி அமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு.!
சென்னை அண்ணா நூற்றாண்டு விழா நூலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மழையினால் பாதிக்கப்பட்டிருக்கும் தமிழக மாணவர்களுக்கு உண்மையான அனைத்து அத்தியாவசிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்திருக்கிறார்.
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் தயார் செய்யப்பட்ட வினாடி வினா புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அவர் இந்தப் புத்தகங்கள் விரைவில் அனைத்து மாவட்டங்களுக்கும் இயக்குனர்கள் மூலம் அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்தார். மேலும் பள்ளிச் சான்றிதழ்கள் மதிப்பெண் சான்றிதழ்கள் ஆகியவை சேதமடைந்த மாணவ மாணவிகள் இணையதளங்களின் மூலம் அவற்றை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் பள்ளி நோட்டு புத்தகங்கள் சேதமடைந்த மாணவ மாணவிகளின் புள்ளி விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக தெரிவித்த அவர் விரைவிலேயே அதற்கான தீர்வு காணப்படும் எனவும் தெரிவித்தார். மேலும் 10 11 மற்றும் 12ஆம் வகுப்பிற்கான பொது தேர்வில் எந்தவித மாற்றமும் இல்லை என தெரிவித்துள்ளார். பாடத்திட்டங்களை விரைந்து முடிப்பதற்காக இனிவரும் சனிக்கிழமைகளிலும் பள்ளி செயல்படும் என தெரிவித்திருக்கிறார்.