சற்றுமுன்..! கோவையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை...? மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு..!
கோவையில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கோவையில் நேற்று இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதில் 10-க்கும் மேற்பட்ட ஓட்டு வீடுகள் இடிந்து சேதமடைந்தன. பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.கோவை நகரின் பெரும்பாலான சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின. மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய கணுவாய், சின்னத்தடாகம், ஆனைகட்டி, குருடம்பாளையம் பகுதிகளில் தொடர் மழையால், சங்கனுார் ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கரைகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு வருவாய் துறையினரால் அழைத்து செல்லப்பட்டனர்.
வால்பாறை, மேட்டுப்பாளையம், அன்னுார், பேரூர், மதுக்கரை தாலுகாக்களில் கனமழையால்,10 ஓட்டு வீடுகளின் சுவர் இடிந்து விழுந்தது. குடிசை வீடுகளும் சரிந்தன. கோவை நகரின் பெரும்பாலான சாலைகளில் வெள்ளம் தேங்கியதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சில சாலைகளில் 2 அடி உயரத்துக்கு வெள்ளம் பெருக்கெடுத்தது. இதனால் கோவையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்படும் எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் கோவையில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கோவையின் பல பகுதிகளில் நள்ளிரவு வரை மழை வெளுத்து வாங்கிய நிலையில், காலையில் மழை நின்றுவிட்டதால் மக்களுக்கு எந்த இடையூறு இல்லை. எனவே, பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல செயல்படும் என தெரிவித்துள்ளார்.