For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

"பட வாய்ப்புகள் இல்லை,, கழிவறை சுத்தம் செய்தேன்" - பிரபல நடிகர் உருக்கம்!

11:31 AM Apr 23, 2024 IST | Mari Thangam
 பட வாய்ப்புகள் இல்லை   கழிவறை சுத்தம் செய்தேன்    பிரபல நடிகர் உருக்கம்
Advertisement

90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட நாயகர்களின் ஒருவர் நடிகர் அப்பாஸ். 1996ஆம் ஆண்டு வெளிவந்த காதல் தேசம் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அஜித் நடித்த கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், கமல் ஹாசனுடன் பம்மல் கே சம்பந்தம், ரஜினியுடன் படையப்பா என முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்தவர். 1996ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான காதல் தேசம் திரைப்படம் மெகா ஹிட்டானது.

Advertisement

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் திரைப்படங்களில் மாஸ் காட்டி வந்த அப்பாஸ், பட வாய்ப்புகள் குறைந்து போகவே சமீப காலமாக திரையில் காணாமல் போனார். இவர் கடைசியாக மலையாளத்தில் வெளிவந்த பச்சக்கள்ளம் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

1997ஆம் ஆண்டு எரும் அலி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். தனது குடும்பத்துடன் வெளிநாட்டில் தற்போது செட்டிலாகிவிட்டார். தற்போது அப்பாஸ் கொடுத்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

இதில் அவர் "சினிமாவில் பிசியாக நடித்துக்கொண்டிருந்த நேரத்தில் சில பிரச்சனைகள் ஏற்பட்டது. அதனால் பட வாய்ப்புகளும் குறைந்தது. அப்போது என் குடும்பத்திற்கு உதவ வேண்டும் என்பதற்காக பைக் மெக்கானிக்காக வேலை செய்துள்ளேன். அதுமட்டுமின்றி கழிவறை சுத்தம் செய்தேன். மேலும் டாக்சி டிரைவராகவும் நியூசிலாந்தில் வேலை செய்துளேன்" என கூறினார். திரையுலகில் உச்சத்தில் இருந்த அப்பாஸ், தனது வாழ்க்கையில் நடந்த விஷயங்கள் குறித்து பேசியது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Tags :
Advertisement