குடும்ப அட்டைதாரர்கள் யாரும் இந்த 2 நாட்களில் ரேஷன் கடைக்கு போகாதீங்க..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை ஜனவரி 14ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி, பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்புடன் கூடிய பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படுகிறது.
இதற்காக கடந்த 3ஆம் தேதி முதல் பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன்களை வீடு வீடாக சென்று விநியோகிக்கும் பணி நடைபெற்றது. இந்நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பு அனைத்து நியாய விலைக் கடைகளிலும் இன்று (ஜன.10) முதல் விநியோகம் செய்யப்படுகிறது. பரிசுத்தொகுப்பை அனைவரும் விரைந்து பெற்றிட ஏதுவாக இன்று (ஜன.10) வெள்ளிக்கிழமை அனைத்து ரேஷன் கடைகளும் வழக்கம்போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்தப் பணி நாட்களை ஈடு செய்யும் விதமாக ஜனவரி 15 மற்றும் 22ஆம் தேதிகளில் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய நாட்களில் ரேஷன் கடைகள் திறக்கப்படாது, பூட்டப்படிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More : 100 மாவட்ட செயலாளர்கள்..!! இறுதி செய்த தவெக..? நேரில் சந்திக்கிறார் விஜய்..!! வெளியான பரபரப்பு தகவல்கள்..!!