முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ஷாக்...! அடுத்த 5 ஆண்டுக்கு மாறுதல் கிடையாது....! புதிய ஆசிரியர்களுக்கு அதிரடியாக பறந்த உத்தரவு...!

06:00 AM Dec 17, 2023 IST | 1newsnationuser2
Advertisement

புதிதாக பணியில் சேரும் ஆசிரியர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு பணியிட மாறுதல் கிடையாது என பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக, பள்ளிக்கல்வித்துறை செயலாளர், பள்ளிக்கல்வி இயக்குனருக்கு அனுப்பி உள்ள கடிதத்தில்; 757 பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட தற்போது வழிவகையில்லை. ஆசிரியர் பணியிடங்கள் அதிகமாக காலியாக உள்ள மாவட்டங்களில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் எண்ணிக்கையுடைய பள்ளிகளுக்கு பணிநிரவல் (Deployment) செய்யப்பட வேண்டும்.

Advertisement

தற்போது பட்டதாரி ஆசிரியர் 2000 பணியிடங்களை நிரப்பி தேர்வு செய்யப்படும் தேர்வர்களை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அதிகமாக காலியாகவுள்ள கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் தருமபுரி மாவட்டங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் நியமனம் செய்யப்பட வேண்டும். இந்த மாவட்டங்களில் தேர்வர்களை முதலில் நியமனம் செய்யும் போது குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் இம்மாவட்டங்களில் பணிபுரிய வேண்டும் எனும் நிபந்தனையை நியமன ஆணையில் குறிப்பிட்டு நியமனம் செய்யப்பட வேண்டும்.

அதோடு, மேற்காணும் அறிவுறுத்தல்களை தவறாது கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. மீறுவோர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கூடுதலாக உள்ள பட்டதாரி ஆசிரியர்களை தேவைப்படும் பள்ளிகளுக்கு முதலில் பணியிட மாறுதல் வழங்கவேண்டும். இந்த பணிகளை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1 முதல் 30-ம் தேதிக்குள் முடித்து, அதன் பிறகு பணியிட மாறுதல் பொது கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும். இந்த உத்தரவின்படி வரக்கூடிய காலங்களில் அனைத்தும் நடைபெற வேண்டும்.

Tags :
educationeducation departmentstafftn government
Advertisement
Next Article