For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

நவம்பர் 1-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு இல்லை...! வானிலை மையம் தகவல்...!

No chance of heavy rain till November 1
12:57 PM Oct 27, 2024 IST | Vignesh
நவம்பர் 1 ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு இல்லை     வானிலை மையம் தகவல்
Advertisement

மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் இருந்து வறண்ட காற்று வீசுகிறது. எனவே, தமிழகத்தில் இன்று முதல் நவம்பர் 1-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பில்லை.

Advertisement

இது குறித்து வானிலை மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தென் தமிழகப் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை தீவிரமாக உள்ளது. இதனால் தென் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், வட தமிழகத்தில் சில இடங்களிலும் மழை பெய்துள்ளது. வங்கக் கடலில் வலுப்பெற்ற டானா புயல் கரையைக் கடந்தாலும், முழுவதுமாக வலுவிழக்காமல், நிலப் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலவுகிறது. இதனால், மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் இருந்து வறண்ட காற்று வீசுகிறது. எனவே, தமிழகத்தில் இன்று முதல் நவம்பர் 1-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பில்லை. அதன் பிறகே மழை பெய்வதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் வரும் 30-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், அக். 31, நவ. 1-ம் தேதிகளில் சில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழக கடலோரப் பகுதிகளுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Tags :
Advertisement