For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஆட்டோ டெலிட் அம்சம் இல்லையா?… தேவையற்ற இமெயில்களை நீக்க ஈஸியான வழி!

05:00 AM Nov 11, 2023 IST | 1newsnationuser3
ஆட்டோ டெலிட் அம்சம் இல்லையா … தேவையற்ற இமெயில்களை நீக்க ஈஸியான வழி
Advertisement

உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் ஜிமெயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இணையத்தில் பெரும்பாலான செயலி அல்லது சேவைகளை கணினி அல்லது ஸ்மார்ட்போன் வாயிலாக பயன்படுத்தும் போது, கூகுள் கணக்கு வாயிலாகவே பயன்படுத்தும் போது, கூகுள் கணக்கு வாயிலாகவே உள்நுழைய முடியும். குறிப்பிட்ட ஆண்டுகளில் தேவையற்ற இ - மெயில்களால், கூகுள் இலவசமாக தரும் 15 ஜி.பி., ஜிமெயில் ஸ்டோரேஜ் நிரம்பி விடுகிறது. மேலும் இதுகுறித்து அறியாத சிலர், தங்களது போட்டோக்கள், தொடர்பு எண்கள், பி.டி.எப் போன்றவற்றை கூகுள் நினைவகத்தில் சேமித்து வைப்பர். கூகுள் ஸ்டோரேஜ் நிரம்பிவிட்டால், நீங்கள் மாதந்தோறும் கட்டணம் செலுத்த வேண்டும். அல்லது தேவையற்ற உள்ளடக்கத்தை அழித்து இடத்தை ஏற்படுத்த வேண்டும்.

Advertisement

ஆயிரக்கணக்கான தேவையற்ற இமெயில்கள், உங்கள் மெமரியை நிரப்பியிருக்கும். இமெயில்களை ஒவ்வொன்றாக நீக்குவது மற்றொரு தலைவலி தரும் வேலை. இதற்கு கூகுள், தானாக அழிக்கும் ஆட்டோ டெலிட் அம்சத்தை அளித்துள்ளது. ஆட்டோ டெலிட் அம்சம் இல்லாதவர்கள் கீழக்கண்ட வழிகளில் இமெயில்களை அழிக்கலாம். உங்கள் ஜிமெயிலை ஆக்கிரமித்துள்ள மிகப்பெரிய, நீண்ட ஃபைல்களை நீக்க வேண்டும். இதற்கு ஜிமெயில் தேடுபொறியில் சென்று 'அட்டாச்மென்ட் லார்ஜர் 10 எம்' என தேடினால், 10 எம்.பிக்கு அதிகமான அனைத்து பைல்களையும் காட்டும். அனைத்து மெயில்களை தேர்வு செய்து மொத்தமாக டெலிட் ஐகானை கிளிக் செய்து நீக்கலாம்.

மேலும், பழைய மெயில்களை அழிப்பது. ஜிமெயில் உள்ள தேடுபொறியில் பழைய மெயில்களை தேர்வு செய்து நீக்கலாம். குறிப்பிட்ட பெயர் அல்லது இமெயில் முகவரியை டைப் செய்து, அனைத்து மெயில்களை தேர்வு செய்யலாம். பின்னர் மேல் உள்ள டெலிட் ஐகானை கிளிக் செய்து நீக்கலாம்.

Tags :
Advertisement