"இதை கண்டிக்க ஒரு நடிகருக்கும் திராணி இல்லை"..!! ”யாரும் பிரச்சாரத்துக்கு போகாதீங்க”..!! வெளுத்து வாங்கிய ப்ளூ சட்டை மாறன்..!!
அம்பேத்கர் குறித்த புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய் குறித்து தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் கூத்தாடி என விமர்சித்த விசிக எம்எல்ஏ ஆளூர் ஷா நவாஸுக்கு எதிர்ப்பு கிளம்பி வருகிறது.
அந்த வகையில், பிரபல திரை விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள தனது எக்ஸ் தள பதிவில், ”சில தினங்களுக்கு முன் நடந்த விவாத நிகழ்ச்சியில் விஜய்யை கூத்தாடி என கோவமாக சாடினார் விசிக எம்.எல்.ஏ. ஆளூர் ஷா நவாஸ். விவாத நிகழ்ச்சிகளில் நாகரீகமாகவும், அமைதியாகவும் பேசும் மிகச்சிலரில் இவரும் ஒருவர்.
ஆனால், இம்முறை இப்படியொரு வார்த்தையை பேசியுள்ளார். சினிமா நடிகர்களை கட்சியில் சேர்ப்பது, பிரச்சாரத்திற்கு அழைப்பது, வெற்றிக்காக வாய்ஸ் தர சொல்வது, கட்சி மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் அருகே அமர வைப்பது, அவர்களின் படங்களை ப்ரிவியூ ஷோ பார்ப்பது, அரசியல் மேடைகளில் நடிகர்களை போல உள்ளவர்களை ஆட வைப்பது என அனைத்திற்கும் அவர்களை ஏன் அழைக்கிறீர்கள்? உங்கள் தலைவர் கூட படங்களில் நடித்துள்ளார்.
ப்ரிவியூ ஷோ பார்த்து விமர்சனம் சொல்கிறார். தனது பிறந்தநாள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு திரையுலகினரை அழைத்து பேச சொல்கிறார். அப்போதெல்லாம் நடிகர்கள் மீது உங்களுக்கு கோவம் வரவில்லையா? கூத்தாடி எனும் வார்த்தை எப்படி உங்களைப்போன்ற சட்டம் படித்தோருக்கு கூட இழிவான சொல்லாக மாறியது? வேறு துறையை அல்லது சமூகத்தை சேர்ந்தோரை இப்படி பேசியிருந்தால், போராட்டம் வெடித்திருக்கும்.
நீங்களும் உடனே மன்னிப்பு கேட்டிருப்பீர்கள். ஆனால், சினிமாக்கரர்களிடம் ஒற்றுமை இல்லாததால். இப்படி பேசியுள்ளீர்கள். இதை கண்டிக்க ஒரு நடிகருக்கும் திராணி இல்லை. அதில் ஆச்சர்யமும் இல்லை. நேற்று நடந்த சினிமா நிகழ்ச்சியில் இயக்குனர்கள் ஆர்.வி. உதயகுமார், பேரரசு ஆகியோர் மட்டும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். வரும் தேர்தலில் சினிமா சம்மந்தப்பட்ட எவரும் உங்கள் கட்சி மற்றும் கூட்டணி கட்சிக்கு பிரச்சாரம் செய்ய வேண்டாம். எங்களுடன் மேடையேற வேண்டாம். இனி சினிமா சார்ந்த நிகழ்வுகளில் நாங்கள் பங்கேற்பதில்லை என உறுதியளிக்க இயலுமா? தங்கள் பேச்சுக்கு வருத்தம் தெரிவிப்பீர்களா?” என்று பதிவிட்டுள்ளார்.
Read More : 160 அடி..!! ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுவன்..!! ஜேசிபி மூலம் குழிதோண்டும் பணி தீவிரம்..!!