அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஸ்காலர்ஷிப் வழங்கும் 'NMMS' தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.!
NMMS: அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் NMMS தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.
மத்திய அரசின் சார்பாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் பொருட்டு இந்த தேர்வுகள் நடத்தப்படுகிறது.தேசிய வருவாய் வழி மற்றும் திறன்படிப்பு உதவித்தொகை திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கு இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது.
இந்தத் தேர்வில் வெற்றி பெறும் 1 லட்சம் மாணவர்களுக்கு அரசு சார்பாக 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை மாதம் ரூ.1,000 வீதம் வருடத்திற்கு ரூ.12,000 என 4 வருடங்களுக்கு வழங்கப்படும். இந்தத் தேர்வில் தமிழகத்தில் இருந்து 6,695 மாணவர்கள் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள்.
இந்த வருடத்திற்கான என்எம்எம்எஸ் தேர்வு கடந்த பிப்ரவரி 3 ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வை நாடு முழுவதிலும் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 2.75 லட்சம் மாணவர்கள் எழுதினார்கள் . தமிழ்நாட்டிலும் 847 தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடத்தப்பட்டது.
2024 ஆம் ஆண்டிற்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. இந்தத் தேர்வின் முடிவுகளை dge.tn.gov.in என்ற இணையதள பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம். இதில் தேர்ச்சி பெற்ற 1 லட்சம் மாணவர்களுக்கு அடுத்த நான்கு ஆண்டுக்கு மாதம் ரூ.1000 வீதம் 4 வருடங்களுக்கு வழங்கப்பட இருக்கிறது.