பெரும்பான்மையை நிரூபித்த நிதீஷ் குமார்.! 129 வாக்குகளுடன் வெற்றி.!
பீகார் மாநிலத்தின் முதலமைச்சரான நிதீஷ் குமார் ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி புரிந்து வந்தார். இந்நிலையில் திடீரென அந்த கூட்டணியில் இருந்து வெளியேறி பாரதிய ஜனதா கட்சி ஆதரவுடன் முதலமைச்சராக பதவியேற்றார். இதனைத் தொடர்ந்து சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இந்த வாக்கெடுப்பில் நிதீஷ் குமாருக்கு ஆதரவாக 129 பேர் வாக்களித்தனர். எதிர்க்கட்சிகள் வாக்கெடுப்பில் பங்கு கொள்ளவில்லை. மேலும் கடந்த ஆட்சியில் இடம்பெற்றிருந்த ராஸ்ட்ரிய ஜனதா தள கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் தேஜஸ்வி யாதவ் தலைமையில் வாக்கெடுப்பில் பங்கு கொள்ளாமல் வெளியேறினர்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற வாக்கெடுப்பில் 129 ஓட்டுகள் பெற்று நிதீஷ் குமார் தனது பெரும்பான்மையை நிரூபித்து மீண்டும் முதலமைச்சர் ஆக பொறுப்பேற்றுக் கொண்டார். மேலும் நிதீஷ் குமார் இந்தியா கூட்டணியில் இருந்து விலகினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக தன்னை அறிவிக்காததை தொடர்ந்து அதிருப்தி அடைந்த அவர் கூட்டணியில் இருந்து வெளியேறி பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தார். மேலும் அந்தக் கூட்டணியில் தொடர்ந்து பயணிக்க இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்