நிர்மலா சீதாராமனை நியமனம் செய்துள்ளேன்...! முதல்வர் ஸ்டாலினுக்கு போன் போட்டு பேசிய பிரதமர் மோடி...!
தென்மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார் பிரதமர் மோடி. பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்கும் என பிரதமர் உறுதி அளித்துள்ளார். வெள்ள பாதிப்பு மதிப்பீடு பணிகளை ஒருங்கிணைக்க நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நியமனம் செய்துள்ளதாக கூறியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்கள் மிக்ஜாம் புயல் மற்றும் அதை தொடர்ந்த வெள்ளத்தால் பெரும் சேதத்திற்கு உள்ளாகியது என்றால், தென் மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பொழிவால் பாதிப்பு உண்டானது. நிவாரண பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று நிவாரணப் பணிகள் மற்றும் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி மக்களுக்கு ரூ.6000 வழங்கப்படும் எனவும் தென்காசி, கன்னியாகுமரி மக்களுக்கு ரூ.1,000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. மேலும், நெல்லை, தூத்துக்குடியில் வெள்ளத்தால் சேதடைந்த விளைநிலங்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.17,000 நிவாரணம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
மேலும் வெள்ளத்தால் உயிரிழந்த எருது, பசுக்களின் உரிமையாளர்களுக்கு நிவாரணமாக ரூ.37,500 வழங்கப்படும். முழுமையாக சேதமடைந்த கட்டுமரங்கள் ரூ.50,000 வழங்கப்படும். முழுவதும் சேதம் அடைந்த வல்லம் வகை படகுகளுக்கு மானிய தொகை ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது. வெள்ள நிவாரண நிதியை உடனடியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும் என சமீபத்தில் பிரதமர் மோடி சந்தித்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தி இருந்தார்.
இந்த நிலையில் நேற்று தென்மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார் பிரதமர் மோடி. பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்கும் என பிரதமர் உறுதி அளித்துள்ளார். வெள்ள பாதிப்பு மதிப்பீடு பணிகளை ஒருங்கிணைக்க நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நியமனம் செய்துள்ளதாக கூறியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.