நிர்மலா சீதாராமன் - அன்னபூர்ணா விவகாரம்..!! முதல்வர் கொடுத்த ரியாக்ஷன்..!! அந்த பெயரை கூட சொல்லலையே..!!
தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈா்க்கும் வகையில், அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ, சிகாகோ ஆகிய நகரங்களுக்கு முதல்வா் முக.ஸ்டாலின் பயணம் மேற்கொண்டார். அங்கு பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்த பயணத்தில் இதுவரை 18 முன்னணி நிறுவனங்களுடன் ரூ.7,618 கோடி முதலீட்டுக்கான புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்நிலையில், அமெரிக்கா சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை வந்த முதல்வர் முக.ஸ்டாலினிடம் அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன் மன்னிப்பு கோரிய சம்பவம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதாவது, கோவையில் ஜிஎஸ்டி தொடர்பாக நடந்த விவாதத்தில் பேசிய அன்னபூர்ணா உரிமையாளர் மன்னிப்பு கேட்டுள்ளது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்று கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த முதல்வர் முக.ஸ்டாலின், ”ஜிஎஸ்டி குறித்து தொழில் முனைவோர் சார்பில் நியாயமான கோரிக்கையை அவர் முன்வைத்தார். அதனை ஒன்றிய அமைச்சர் கையாண்ட விதத்தை மக்கள் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்” என்று கூறிவிட்டு சென்றார். வேறு எதையும் முதல்வர் தெரிவிக்கவில்லை. அதாவது, நிர்மலா சீதாராமன் பெயரை கூறாமல் அவரது செயல்பாட்டை மக்கள் பார்த்து கொண்டிருப்பதாக மட்டுமே கூறினார்.
Read More : தமிழ்நாட்டில் 11,516 பேருக்கு வேலைவாய்ப்பு..!! சென்னை வந்தடைந்தார் முதல்வர் முக.ஸ்டாலின்..!!