கேரளாவை அச்சுறுத்தும் நிபா வைரஸ்!. 4 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை!
Nipah virus: கேரளாவில் நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட 4 பேர் மஞ்சேரியில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த 24 வயது வாலிபர் நிபா வைரஸ் பாதிப்பில் கடந்த செப்.9-ம் தேதி அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. தொடர்பில் இருந்த 267 பேரில், அறிகுறியின் அடிப்படையில் ஆறு பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இதில் இரண்டு பேருக்கும் நிபா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து 2 பேரும் மலப்புரத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மேலும், நிபா வைரஸ் பாதிப்பு தொடர்பாக மேலும் 3 பேரின் பரிசோதனை முடிவுகள் எதிர்மறையாக வந்துள்ளதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தினார். கேரள சுகாதாரத்துறை அமைச்சரின் கூற்றுப்படி, “மேலும் 3 பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பு இல்லை, மொத்த நெகட்டிவ் வழக்குகளின் எண்ணிக்கை 78 ஆக உள்ளது” என்றார்.
அறிகுறி தென்பட்ட மேலும் ஒரு நபர் நேற்று மஞ்சேரி மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நபர் உட்பட, மொத்தம் நான்கு பேர் தற்போது மஞ்சேரி மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர், 28
பேர் பெரிந்தல்மன்னாவில் உள்ள எம்இஎஸ் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கால் சென்டர் மூலம் உதவி பெறுவதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
Readmore: உங்கள் வாட்ஸ்அப்-ஐ வேறு யாராவது பயன்படுத்துகிறார்களா?. கண்டறிவது எப்படி? எச்சரிக்கை அறிகுறிகள்!