For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

சற்றுமுன்...! தீயாக பரவும் நிபா வைரஸ் பாதிப்பு..‌ பள்ளி, கல்லூரிகளை மூட உத்தரவு..!

06:55 AM Sep 19, 2024 IST | Vignesh
சற்றுமுன்     தீயாக பரவும் நிபா வைரஸ் பாதிப்பு  ‌ பள்ளி  கல்லூரிகளை மூட உத்தரவு
Advertisement

கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் 175 பேருக்கு நிபா வைரஸ் காய்ச்சல் பரவியுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. கட்டுப்பாட்டு மண்டலங்கள் அறிவிக்கப்பட்டு நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Advertisement

இது குறித்து மாநில சுகாதார துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது; நிபா வைரஸ் காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளானவர்களில் 126 பேர் தீவிர பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். 49 பேருக்கு லேசான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 104 பேருக்கு தீவிரசிகிச்சை அளிக்கப்படுகிறது. மாஞ்சேரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 10 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். 13 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. நிபா வைரஸ் பாதிப்புக்கு உள்ளானவர்களின் வீட்டை சுற்றி 3 கி.மீ தூரத்தில் வசிப்பவர்களுக்கு காய்ச்சல் உள்ளதா என்பதை பரிசோதிக்க 66 குழுக்களை சுகாதாரத்துறை அமைத்துள்ளது.

அறிகுறிகள்; நிபா வைரஸ் உடலில் நுழைந்த இரு வாரங்களுக்குள் நோய் அறிகுறிகள் தென்படும். சிலருக்கு அறிகுறிகள் தெரியாமலும் இருக்கலாம். தொடக்கத்தில், பாதிக்கப்பட்டவருக்கு இருமல், காய்ச்சல், தொண்டைவலி, தலைவலி, வாந்தி என பொதுவான அறிகுறிகள் இருக்கும். இவற்றைத் தொடர்ந்து நோயாளிக்கு சுவாசிப்பதில் சிரமம், வலிப்பு, குழப்பம், வாய் குழறுதல் போன்ற மோசமான அறிகுறிகள் தோன்றும்.

Advertisement